Home » உரி – 71
உரி நாள்தோறும்

உரி – 71

71. மாணாக்கன்

சார்வாகனே, முதலில் நீ என்னை இரண்டு முறை மன்னிக்க வேண்டும். உன் மன்னிப்பு, உன் மனத்திலிருந்து வெளிப்படுவதாகவும் முற்றிலும் உண்மையானதாகவும் இருக்க வேண்டும். அதாவது, அதன் உண்மைத்தன்மையை நான் உணர வேண்டும். இவை இரண்டும் முதலில் நடக்கட்டும். பிறகு நாம் வாதம் புரியலாம்,

என்று அபுது சொன்னான்.

அது வேண்டுகோளா நிபந்தனையா என்று துலங்காமல் அவன் சிறிது திகைத்தான். அவனையறியாமல் புன்னகை செய்தான்.

உன்னை நான் சிரிக்கச் சொல்லிக் கேட்கவில்லை நல்லவனே. நான் சொன்னதைச் செய்,

என்று அபுது மீண்டும் சொன்னபோது உதுமானி நாயனாரும் அவரது மாணாக்கர்கள் அனைவரும்கூடச் சிரித்தார்கள். இந்தச் சிரிப்பு சிறிது உரத்து வெளிப்பட்டதைக் கண்டேன்.

இரண்டென்ன. எத்தனை முறையும் மன்னிக்கலாம். ஆனால் அதற்கு முதலில் நீ செய்த பிழை என்னவென்று எனக்குத் தெரிய வேண்டும் பட்சியே என்று சார்வாகன் சொன்னான்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!