Home » விதைக்காமல் அறுவடை
உலகம்

விதைக்காமல் அறுவடை

2026 பிப்ரவரி 28. அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீது ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடங்கியிருந்தன. உலக எண்ணெய் வர்த்தகத்தின் பிரதானப் பாதையான ஹோர்முஸ் ஜலசந்தி, இரானின் கட்டுப்பாடுக்குள் வந்தது. கச்சா எண்ணெய் விலை ஏகத்துக்கும் ஏறியது.

மொத்த உலகமும் எண்ணெய் தட்டுப்பாட்டில் வதங்கிக் கொண்டிருந்த போது, ஒரு நாடு மட்டும் களிப்பிலும் பூரிப்பிலும் விகசித்துக் கொண்டிருந்தது. அதன் பெயர் சீனா. உலகக் கச்சா எண்ணெய் இறக்குமதியில் சீனா பல ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்து வருகிறது. இரானின் மொத்த எண்ணெய் ஏற்றுமதியில் தொண்ணூறு சதவீதத்தை சீனாவே கொள்முதல் செய்கிறது.

போர் ஆரம்பித்த சில தினங்களுக்குள் அமெரிக்காவின் அதிநவீனப் போர்க்கருவிகள் இரானைக் கணநேரத்தில் தவிடுபொடியாக்கிவிடும் என்றே கணிக்கப்பட்டது. அதிலும் அமெரிக்காவின் பேட்ரியட் ஏவுகணைகள் ராட்சச வீரியம் கொண்டவை. ஒரே நேரத்தில் நூறு இலக்குகளைக் கண்காணிக்கும் திறன் பெற்றவை. சுமார் 150 கிலோமீட்டர் வரை சென்று தாக்கும் வல்லமை பொருந்தியவை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!