Home » நீ வேறு, நான் வேறு – 45
நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 45

45. ஊர் திரண்ட போர்

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்து மூன்றாம் வருடம் மார்ச் இரண்டாம் தேதி BPLF ஒரு முழு நீள, மாநிலம் தழுவிய தாக்குதல்களைத் தொடர்ச்சியாக நடத்த முடிவு செய்தது. சரியாக ஒரு மாதம் அதற்காக வேலை செய்துவிட்டு, ஏப்ரல் மாதம் செயலில் இறங்கியது. அவர்கள் என்ன வேலை செய்தார்கள் என்பதுதான் இங்கே முக்கியம். பலூசிஸ்தான் விடுதலை இயக்கத்தினருக்கு அப்போது ஆயுதங்களுக்கோ, பயிற்சிக்கோ பிரச்னை இல்லை. அதை ஆப்கனிஸ்தான் வழியாக சோவியத் பார்த்துக்கொண்டது. அவர்கள் வேலை செய்ததெல்லாம் மக்களுக்கு அத்தகவலை ரகசியமாகக் கொண்டு சேர்ப்பதன் பொருட்டே.

ஏனென்றால், அம்முறை அவர்கள் மிகவும் உக்கிரமான மனநிலையில் இருந்தார்கள். பலூசிஸ்தானுக்குள் நிலைகொண்டிருந்த பாகிஸ்தான் ராணுவத்தினரை மொத்தமாக ஒழித்துவிட வேண்டும் என்று நினைத்தார்கள். எனவே, ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் தாக்குவது, ஒவ்வொரு நாளும் ஒரு தாக்குதல் சம்பவமாவது நிச்சயமாக நடப்பது என்று இரண்டு இலக்குகளைத் தீர்மானித்துக்கொண்டார்கள். எல்லாமே கெரில்லா தாக்குதல்கள்தாம் என்பதால் எப்போதும் அதில் உள்ள அபாயங்களில் இருந்து பொது மக்களை விலகியிருக்கச் செய்வது முக்கியம் என்று நினைத்தார்கள். அதனால்தான் ஒரு மாத காலம் அவகாசம் எடுத்துக்கொண்டு மக்களுக்கு எச்சரிக்கை செய்யத் தனியொரு குழுவினை நியமித்தார்கள்.

மர்ரி பழங்குடி மக்கள் அதிகம் வசித்த பகுதிகளில் மர்ரி இனப் போராளிகளே அந்தப் பணியைச் செய்துவிட்டார்கள். இதர இனக்குழுவினருக்குத் தெரிவிப்பதற்குத்தான் ஆள்களைத் தேர்ந்தெடுக்கவேண்டி இருந்தது. இது ஒரு பிரச்னையா என்றால், ஆம். உள்ளதிலேயே மிகப்பெரிய பிரச்னையும் இதுதான்.

பலூசிஸ்தான் பழங்குடியினர் என்று ஒரு சொல்லில் நாம் கூறு கட்டி வைத்துவிடுகிறோம். சிறிது உள்ளே புகுந்து விவரம் தெரிந்துகொள்வோருக்கு பலூச்சிகள், பஷ்தூன்கள், மர்ரிகள், புக்திகள் என்று நாலைந்து பெயர்கள் தெரிய வரும். உண்மையில் எழுபதுக்கும் மேற்பட்ட பழங்குடி இனத்தவர்கள் அங்கே வசிக்கிறார்கள். எழுபதுகளுக்கு முன்பு வரை இந்த எண்ணிக்கை இன்னும் அதிகம். கடந்த 30-35 ஆண்டுகளில் பல இனக்குழுவினர் இருந்த சுவடே இல்லாமல் அழிக்கப்பட்டுவிட்டார்கள். பெரும்பாலும் காடுகளில், மலைகளில், பள்ளத்தாக்குகளில் இவர்கள் வசிப்பார்கள். கிராமப்புறங்களுக்கு இடம்பெயர்ந்து குடிசை கட்டி வாழ்வோரே சொற்பம். தாற்காலிகக் கூடாரங்களில் மட்டுமே இருப்பார்கள். ஓரிடமாகத் தங்காமல் அலைந்துகொண்டே இருப்பது அவர்கள் வழக்கம். எங்கே இரவு தங்க வேண்டி வருகிறதோ, அங்கே கூடாரங்கள் அமைக்கப்படும். விடிந்ததும் கழட்டித் தோளில் போட்டுக்கொண்டு போய்க்கொண்டே இருப்பார்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!