Home » நீ வேறு, நான் வேறு – 46
நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 46

46. எங்கே போனார்கள்?

அந்தப் பிராந்தியத்துக்குச் சமலாங் (Chamalang) என்று பெயர். பலூசிஸ்தானில் லூனி மற்றும் மர்ரி பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மலைப்பகுதிகளை அடுத்த மாபெரும் பள்ளத்தாக்கு. பிரிட்டிஷ் பலூசிஸ்தான் படைகள் இந்தப் பகுதியில் குடியிருந்த காலத்தில், 1885 ஆம் ஆண்டு சமலாங்கில் நிலக்கரி கிடைக்கும் சாத்தியம் இருப்பதாகக் கண்டறிந்து, தோண்டிப் பார்க்க ஆரம்பித்தார்கள். கணித்தது சரியே. இன்றைக்கு ஆசியாவின் இரண்டாவது பெரிய நிலக்கரிச் சுரங்கம் அது. (முதலிடம் சட்டீஸ்கரில் உள்ள கெவ்ரா).

நீங்கள் நெய்வேலிக்குப் போயிருக்கிறீர்களா? சுரங்கப் பகுதிகளில் நிலம் செக்கச் செவேலென்றிருக்கும். தோண்டிப் போட்ட மலையெல்லாம் கன்னங்கரேல். மண்ணைத் தவிர மண்ணில் வேறொன்றும் இராது. ஊரில் ஒரு புல் கூடவா முளைக்காது என்று திகைப்பு ஏற்படுவது திண்ணம். அந்தத் திகைப்பிலிருந்து மீளாமல் திரும்பி வந்து மெயின் ரோடுக்கு மறுபுறம் செல்வீர்களானால் பச்சைப் பசேலென்று முந்திரிக்காடு உங்களை எடுத்து விழுங்கக் காத்திருக்கும். கண்ணெட்டும் தொலைவெல்லாம் முந்திரி மரங்கள். முந்திரிப்பழ வாசனையைக் காவிப் பிடித்துக்கொண்டு அப்படியே பன்ருட்டி வரை நடந்தே போய்விடலாம்.

கிட்டத்தட்ட அந்த மாதிரிதான். பலூசிஸ்தானின் சமலாங்கில் முந்திரிக் காடுகள் கிடையாது. ஆனால் ஆடு மாடுகளின் விருப்பத்துக்குகந்த அருமையான மேய்ச்சல் நிலங்கள் அதிகம். முடிவே இல்லாத மிக நீண்ட பச்சைப் புல்வெளிகளை அங்கே பல இடங்களில் பார்க்க முடியும். சமலாங் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள மலைகளுக்கு மேலே வசிக்கும் மர்ரி பழங்குடி மக்கள் எப்போது கோடைக்காலம் வருமென்று காத்திருப்பார்கள். வந்ததும் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு, புருஷன், பெண்டாட்டி, பிள்ளை குட்டிகள் சகிதம் மலைகளை விட்டு இறங்கத் தொடங்கிவிடுவார்கள். அவர்களது வாழ்வாதாரமே கால்நடைகள்தாம். கோடைக்காலம் முழுவதும் அவற்றைப் புல் மேய விட்டு, நன்கு புஷ்டியாக்கிக்கொண்டு கோடை முடியும்போது மீண்டும் மலையேறிவிடுவார்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!