Home » காமாக்யா: இந்தியாவின் ‘அதிகார மையம்’
வரலாறு

காமாக்யா: இந்தியாவின் ‘அதிகார மையம்’

அமெரிக்கா செல்வதற்கு விசா கிடைக்க வேண்டும் என்றால் ஹைதராபாத் சில்குர் பாலாஜி கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்பார்கள். அதுபோல, ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் நாற்காலி உங்களைத் தேடி வர வேண்டும் என்றால் காமாக்யா கோவிலுக்குச் செல்ல வேண்டும்.

இந்திய அரசியல் மற்றும் அதிகார வட்டத்தின் முக்கிய மையமாக விளங்கும் காமாக்யா தேவி கோவிலுக்கு, டெல்லி முதல் தென்மாநிலங்கள் வரை பல இடங்களிலிருந்தும் முக்கிய விஐபிக்கள் தொடர்ந்து வருகை தந்துள்ளனர். குறிப்பாக, கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார், தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை ஆகியோர் தங்களின் முக்கிய அரசியல் முடிவுகளுக்கு முன்பாக இங்கு வந்து சென்றுள்ளனர்.

அதேபோல, 2022இல் மகாராஷ்டிராவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத் திருப்பத்தின் போது, ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 40 பேரும் குவாஹாத்தியில் தங்கியிருந்த சமயத்தில் இந்த ஆலயத்தில் சிறப்புப் பிரார்த்தனை நடத்தினர். இவர்களைத் தவிர, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி வத்ரா, கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த், அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் போன்ற தேசியத் தலைவர்களும், அண்டை நாடான பூட்டானின் பிரதமர் தாஷோ ஷெரிங் தோப்கே போன்ற சர்வதேசத் தலைவர்களும் தங்கள் அரசியல் ஸ்திரத்தன்மை, நாட்டின் வளர்ச்சி மற்றும் தேர்தல் வெற்றிகளுக்காக இந்த நீலாச்சல் மலையின் வரலாற்றுச் சிறப்புமிக்க வழிபாட்டு மையத்தைத் தொடர்ந்து நாடி வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!