Home » மறையாத சூரியன்
கிச்சன் கேபினட்

மறையாத சூரியன்

லூசியா ஆடம்ஸ்

லூசியா ஆடம்ஸ்

இங்கிலாந்தில் பிறந்து, ஃபிரான்ஸில் வளர்ந்து அமெரிக்க முதல் குடிமகளாக வலம் வந்தவர். மூட்டை முடிச்சுகளோடு புகைவண்டிப் பெட்டியிலும் குடும்பம் நடத்தியிருக்கிறார். சின்ன இரண்டு அறை வீட்டிலும், மாடிப்படிகளின் கீழேயும் வாழ்ந்திருக்கிறார், இங்கிலாந்து ராணியின் மாளிகை முதல் வெள்ளை மாளிகை வரை அவர் வசிக்காத இடங்களும் இல்லை.

இளவரசி போலக் கவலையில்லா இளமைப் பருவம். நாடோடி போலச் சில காலம், அரசி போல ஒரு வாழ்க்கை என அத்தனை அனுபவங்கள். ஆனால் அவருக்குப் பிடித்தது அன்னையாக, கவிஞராக, எழுத்தாளராகத் தனிமையில் வாழ்ந்த வாழ்க்கைதான். அவருடைய கேளிக்கை விருந்துகளைப் பற்றி வாஷிங்டன் டிசி பேசியது. ஆனால் அவர் விரும்பியது தனிமையை. அப்படிப்பட்டவர்தான் லூசியா ஆடம்ஸ்.

லூசியா ஆடம்ஸ், ஜாஷுவா ஜான்சன் என்ற புகழ்பெற்ற வியாபாரிக்கும், காத்தரின் நாத் என்பவருக்கும் மகளாக 1775 பிப்ரவரி 12 அன்று லண்டனில் பிறந்தார். தந்தைக்கு அமெரிக்க அரசியல்வாதிகளுடன் நட்பு இருந்தது. லூசியாவின் தந்தையின் சகோதரர் தாமஸ் ஜான்சன், 1774இல் கான்டினென்டல் அசோசியேஷனில் கையெழுத்திட்டவர்களில் ஒருவர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!