மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஐம்பத்தெட்டு சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமையின் மீது அதிருப்தி, உட்கட்சிப் பூசல், ஊழல் புகார்களுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு, அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ரிதப்ரதா பானர்ஜியின் தலைமையில் தனி அணியாகச் செயல்படத் தொடங்கியுள்ளனர். இந்த அதிருப்தி எம்.எல்.ஏக்களின் ஆதரவோடு ரிதப்ரதா பானர்ஜி சபாநாயகரால் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் நிறுவனரும் தலைவருமான மம்தா பானர்ஜி, இளம் வயதிலேயே போராட்டக் குணம் கொண்டவர். தனியாளாக அவர் மட்டுமே ஒரு படை போலப் போராடி ஆட்சியைப் பிடித்தார்.
1975, எமர்ஜென்ஸி காலம். காங்கிரஸுக்கு எதிராகச் செயல்பட்ட ஜெயப்ரகாஷ் நாராயணனின் கார் வடக்குக் கொல்கத்தாவில் வந்து கொண்டிருந்தபோது காங்கிரஸ் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டது. திடீரென இளம்பெண் மம்தா பானர்ஜி அந்தக் கார் பானட்டின் மீது ஏறி நின்று நடனமாடியபடி இந்திரா காந்திக்கு ஆதரவாக முழக்கமிட்டார்.















Add Comment