Home » ஐஸ் சுடுகிறது
உலகம்

ஐஸ் சுடுகிறது

வடதுருவத்தின் ஆர்க்டிக் வட்டத்துக்கு மிக அருகில் அமைந்துள்ள நாடு ஐஸ்லாந்து. நான்கு லட்சத்துக்கும் சற்றே குறைவான மக்கள்தொகையைக் கொண்ட குட்டித்தீவு. சில நாள்களாக ஐஸ்லாந்து அரசியலில் பரப்பரப்பான விவாதம் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதையொட்டி, வரும் ஆகஸ்டு மாதம் பொது வாக்கெடுப்பு (referendum) ஒன்றும் நடைபெறவுள்ளது.

அப்படி எதைப் பற்றி விவாதிக்கிறார்கள் ஐஸ்லாந்துக்காரர்கள்? இப்போதைய விவாதப்பொருள், ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்காகப் பேச்சுவார்த்தையை ஐஸ்லாந்து மீண்டும் தொடங்குவது குறித்துத்தான். அதாவது, பொது வாக்கெடுப்பில் ஐஸ்லாந்து மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவதா வேண்டாமா என்பது பற்றி வாக்களிக்கப் போவதில்லை. மாறாக, சேருவதற்கான பேச்சுவார்த்தையை ஐஸ்லாந்து மீண்டும் தொடங்க வேண்டுமா என்பது குறித்துத்தான் வாக்களிக்கப் போகிறார்கள். பேச்சுவார்த்தையைத் தொடங்கப் பெரும்பான்மையான மக்கள் பச்சைக்கொடி காட்டிவிட்டால், ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான வாக்கெடுப்பு பின்னர் நடத்தப்படும்.

பேச்சுவார்த்தை நடத்துவதற்கெல்லாம் ஒரு வாக்கெடுப்பா என்ற வினா எழுகிறதல்லவா? ஐஸ்லாந்து மக்கள் தங்களது பொருளாதாரம், சந்தை மற்றும் தொழில் சார்ந்த சுதந்தரத்தை மிகத் தீவிரமாகப் பேணுபவர்கள் என்பதே அதற்கான விடை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!