‘குளிர்காலத்தின் ஆழங்களில்தான், யாராலும் வெல்ல முடியாத ஒரு கோடை எனக்குள் இருப்பதை நான் கண்டு கொண்டேன்’
ஆல்பர்ட் காம்யூ வின் மிகப் பிரபலமான வாசகம் இது. பைஜுஸ் நிறுவனத் தலைவர் பைஜூ ரவீந்திரன், தன் ஊழியர்களுக்குச் சென்ற செப்டம்பர் மாதத்தில் விடுத்த செய்தியில் இவ்வாசகம் இடம்பெற்றிருந்தது. இப்போது, தனக்கான கோடையைத் தேடி அப்படியான ஒரு குளிர் காலத்தின் ஆழத்தை நோக்கி மெதுமெதுவாக நகர்ந்து கொண்டிருக்கின்றது அந்நிறுவனம்.
அசுரத்தனமான, அசாதாரணமான வளர்ச்சி என்பதற்கு சம காலத்தில் சொல்லக்கூடிய மிகச் சிறந்த உதாரணம் பைஜுஸ். தொடங்கப்பட்டுப் பத்து வருடங்களுக்குள் சுமார் இருபத்திரண்டு பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியுடைய நிறுவனமாக மாறி இருக்கின்றது என்றால் அது இயல்பானதா என்று சிந்திக்க வேண்டியிருக்கிறது.
மூன்றாம் வகுப்பு படிக்கும் என் மகளுக்கு கிளாஸ் எடுப்பதாகச் சொல்லி அழைத்துக் கொண்டே இருந்தனர். பைஜூஸின் பெயரும் விளம்பரங்களும் கண்ணில் பட்டுக் கொண்டே இருக்கும்.
இப்போது அவர்களுக்கு என்ன ஆனது?
ஆல்பர்ட் காம்யுவின் சொற்களிலிலிருந்து ஆரம்பித்து பைஜூஸின் மணற்கோட்டை சரியத் தொடங்கியிருப்பதை சரியாக விளக்கியிருக்கிறது கட்டுரை
நன்றி காயத்திரி
thought-provoking piece Darshana.
Thank you sir
சீன அரசு செய்த மாதிரி எல்லா லாப நோக்கு உடைய டியூஷன் நிறுவனங்களை மூட வேண்டும்.