Home » கனடாவின் கார்னி(வல்)
உலகம்

கனடாவின் கார்னி(வல்)

கனடா நாட்டின் புதிய பிரதமராக லிபரல் கட்சியின் மார்க் கார்னி பதவி ஏற்றுள்ளார். முந்தைய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ பத்து வருட காலம் அந்தப் பதவியில் இருந்த பின்னர் மக்களின் அதிருப்தி காரணமாகப் பதவி விலகினார். இன்னும் ஆறு மாதங்களில் கனடாவில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. அதுவரை மார்க் கார்னி பிரதமராகப் பதவி வகிப்பார்.

59 வயதாகும் கார்னி, ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதார முனைவர் பட்டம் பெற்றவர். கனடிய அரசாங்கத்தின் நிதி மற்றும் வங்கித் துறைகளில் பல பதவிகளை வகித்தவர். 2008 முதல் பதிமூன்று ஆண்டுகள் பாங்க் ஆஃப் கனடா, பாங்க் ஆஃப் இங்கிலாந்து ஆகியவற்றின் கவர்னராக இருந்து, பொருளாதார மந்த நிலையில் இருந்து அந்நாட்டை மீட்டெடுத்ததில் முக்கியப் பங்காற்றியவர். 2020 கோவிட் பெருந்தொற்றுக் காலம் முதல் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு ஆலோசகராகப் பணியாற்றிவிட்டு தற்போது லிபரல் கட்சித் தலைவராகவும் பிரதமராகவும் பொறுப்பேற்றுள்ளார்.

கார்னி பிரதமரானது இந்தியாவின் பார்வையில் ஒரு சாதகமான மாற்றம் என்று சர்வதேச அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர். காரணம், கனடாவில் சுமார் 18.5 லட்சம் இந்திய வம்சாவளியினர் வசிக்கின்றனர். இது அந்நாட்டு மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 5.1%. அவர்களில் எட்டு லட்சம் பேர் சீக்கியர்கள். கனடிய அரசாங்கத்தில் பல இந்தியர்களும் சீக்கியர்களும் முக்கியப் பதவிகள் வகிக்கின்றனர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!