Home » சாகோஸ்: நீதிக்கொரு போராட்டம்
உலகம்

சாகோஸ்: நீதிக்கொரு போராட்டம்

ஐக்கிய ராஜ்ஜியத்துக்கும் மொரிஷியஸ்க்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது. நீண்ட காலமாக சட்டப் போராட்டம் நடத்தப்பட்ட சாகோஸ் தீவுகள் தொடர்பான ஒப்பந்தம் இது.

சாகோஸ் தீவுகள் விவகாரம் என்பது உலக அரசியலில் பெரும் விவாதத்திற்கு உள்ளாகியதும் நெடு நீண்ட வரலாற்றுப் பின்னணியை உடையதுமான நில உரிமை மீட்டெடுப்புப் பிரச்சினையே ஆகும். இது இருநாட்டு இடமாற்ற ஒப்பந்தம் மட்டுமல்ல. காலனித்துவத்தின் கோரமுகம், சர்வதேச நீதியின் போர்க்குரல், மனித உரிமைகளின் மீள் நடை மற்றும் உலக ராணுவப் பேரரசியல் எனப் பல பரிணாமங்களை உள்ளடக்கியது.

இந்தியப்பெருங்கடலில் மொரிஷியஸின் தெற்கில் அமைந்துள்ள தீவுக்கூட்டமே சாகோஸ் தீவுகள். 1814 ஆம் ஆண்டு பிரிட்டன் நெப்போலியப் போரின் மூலம் பாரிஸ் ஒப்பந்தத்தின் படி இத்தீவுகளை கைப்பற்றியது. 1965-ல் மொரிஷியஸ் சுதந்திரத்தின் போது பிரிட்டன் சாகோஸ் தீவுகளை தனியாகப் பிரித்து British Indian ocean territory (BIOT) பிரிட்டானிய இந்திய பெருங்கடல் எல்லை என தன் முழு கட்டுப்பாட்டில் சேர்த்துக் கொண்டது. இதன் பின்னணியில் அமெரிக்காவின் எதிர்கால இராணுவத்தேவைகளுக்கான திட்டங்களே இருந்தன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!