பத்து வேடங்களில் கமல் நடித்த படம் ‘தசாவதாரம்’. கதை சோழர் காலத்தில் தொடங்கும். இந்தியாவில் சுனாமி வந்த சமயம் முடியும். தொடர்பற்றதாகத் தோன்றும் அனைத்து நிகழ்வுகளுக்கும் ஒரு தொடர்பு இருக்கும். புஷ் இல்லாவிட்டால் விமானம் திரும்ப அழைக்கப்பட்டிருக்கும். ஷிங்கன் இல்லாவிட்டால் கோவிந்த் இறந்திருப்பார். சுனாமி இல்லாவிட்டால் உலகம் அழிந்திருக்கும். இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். பட்டாம்பூச்சி விளைவே திரைக்கதையின் அடிப்படை. இந்த விளைவை மையப்படுத்தி அந்நியன் படத்திலும் சில காட்சிகள் உண்டு. ஒருவன் பிளாக்கில் சரக்கு விற்பான். அதை வாங்கி மின்சார வாரியத்தில் வேலை பார்ப்பவன் குடிப்பான். மின்சார வயர் தண்ணீரில் கிடைப்பதை பார்த்த ஒருவர் போன் கால் செய்வர். சரியான பதில் அவருக்கு கிடைக்காது. ஒன்வேயில் ரிட்ஷா ஓட்டிச் செல்வார். ஒரு சிறுமி ரிக்ஷாவில் இருந்து கீழே விழுவாள். உயிர் போகும்.
Add Comment