Home » நிலவின் மண்ணில் கார்பன் துளிகள்: ஒரு சீன சாகசம்
அறிவியல்-தொழில்நுட்பம்

நிலவின் மண்ணில் கார்பன் துளிகள்: ஒரு சீன சாகசம்

கல்யாணத்துக்குத் தேதி குறித்து விட்டால் அடுத்தடுத்த காரியங்கள் தானாக நடக்கும். சீனாவும் தேதி குறித்து விட்டது. சரியாக 2030-ஆம் ஆண்டில் விண்வெளி வீரர்கள் கொண்ட குழுவொன்று சந்திரனில் தரையிறங்கப் போவதாக சீனாவின் விண்வெளி மையமான CNSA தீர்மானித்துள்ளது. அந்தப் பயணத்தின் வெற்றியைப் பொறுத்து 2035-இல் ரஷ்யாவுடன் கூட்டாக நிலவில் ஒரு ஆய்வுத் தளம் அமைக்கவும் இருக்கிறது. திட்டம் பெரிதாக இருப்பதால் ஆயத்தங்களும் பலமாக இருக்கின்றன. சாங்-ஏ -6 எனும் சீனாவின் அண்மைய நிலவுப் பயணமும் அதில் ஒன்று எனலாம்.

அண்டவெளிக்குப் போகும் ஏகபோக உரிமையை உலகின் ஒருசில நாடுகள் மாத்திரமே அனுபவித்த காலம் ஒன்றிருந்தது. அந்தத் தொழில்நுட்பமோ, வளங்களோ வேறு யாரையும் அண்டாமல் அவை கச்திதமாகப் பார்த்துக் கொண்டன. ஆனால் அதையும்மீறிச் சில தேசங்கள் இந்தத் துறையைத் தீண்டிப் பார்த்தன. இந்தியா, சீனா, ஜப்பான் என்று பட்டியல் நீண்டு கொண்டே சென்றது. ஒரு கட்டத்தில் மூடி மறைத்துத் தனியே விண்ணைத் தொடுவதை விடவும் சிறந்த வழியொன்றை சர்வதேசங்களையும் சேர்ந்த அறிவியலாளர்கள் கண்டு பிடித்தார்கள். அது… கூட்டாக வேலைசெய்வது.

கண்டுபிடிப்புகளும், ராக்கட் பாகங்களும் (அன்புடன்) பரிமாறப்பட்டன. சட்டதிட்டங்களும், சமவாயங்களும் தோற்றம் பெற்றன. எங்கும் ஒளிமயமானது. சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் (ISS) உட்பட அமோகமான பக்கவிளைவுகள் உலகுக்குப் பரிசாகக் கிடைத்தன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!