“ஏன் நம்ம கம்ப்யூட்டர் இவ்வளவு ஸ்லோவா வேலை செய்யுது?” என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. நீங்கள் ஒரு புத்தம் புதிய கம்ப்யூட்டரை வாங்கி வந்த அத்திருநாளை நினைத்துப் பாருங்கள். அன்றைக்கெல்லாம் உங்கள் கம்ப்யூட்டர் மின்னல் வேகத்தில் வேலை செய்ததல்லவா? பின்னர் இப்போது மட்டும் என்ன பிரச்சனை? ஏன் ஆமை வேகம்?
சாத்தியங்கள் இரண்டு. ஒன்று, நீங்கள் முன்பைவிட அதிவேகமாக வேலை செய்யத் தொடங்கி விட்டீர்கள். எனவே கம்ப்யூட்டர் மெதுவாக வேலை செய்வது போலத் தோற்றமளிக்கிறது. இது முதல் சாத்தியம். இரண்டாவது உண்மையிலேயே கம்ப்யூட்டர் ஸ்லோவாகிவிட்டது. இவற்றுள் எது நிகழ்ந்திருக்க வாய்ப்புகள் அதிகமென்று உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள்.
Add Comment