கோஸ்டா ரிக்காவின் சிறைச்சாலை ஒன்றில், ஒரு பூனை தன்னந்தனியாக மதில் சுவரின் மேல் நின்றுகொண்டிருந்துள்ளது. பூனைதானே இருந்துவிட்டுப் போகட்டும் என்று விட்டுவிடாமல், சந்தேகத்துடன் அதனைப் பரிசோதித்துள்ளனர் போலிஸார். அவர்கள் கணக்கு தவறவில்லை. பூனைக்கு மணி கட்டுவது போல, கோக்கைன், கஞ்சா போன்ற போதைப்பொருள்கள் கட்டப்பட்டிருந்தன.
காதலுக்குக் காக்கை கூட தூது போகும் என்பதெல்லாம் அந்தக்காலம். இன்று அதற்குப் பல நூறு செயலிகள் வந்துவிட்டன. காக்கையும், பூனையும் மறைமுகச் செயல்களுக்குத்தான் இக்காலத்தில் தூது போகின்றன. பூனையைப் பிடித்து, அதிலிருந்து போதைப் பொருள்களை வெளியெடுத்த வீடியா பிரபலமாகச் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதெல்லாம் வேடிக்கையாகப் பார்க்கப்பட்டாலும், கோஸ்டா ரிக்காவில் சர்வசாதாரணமாகப் போதைப் பொருள்கள் கைமாறப்படுகிறது என்பது அச்சுறுத்தும் உண்மை.













Add Comment