Home » தர்மத் தலமா? திகில் தலமா?
இந்தியா

தர்மத் தலமா? திகில் தலமா?

கர்நாடக மாநிலத்தில் இருக்கும் தர்மஸ்தலா கோயிலின் முன்னாள் துப்புரவுப் பணியாளர் என அடையாளப்படுத்திக் கொண்ட ஒருவர், ‘1998 முதல் 2014 வரை கோயிலை நிர்வகிக்கும் சிலர் சொல்லி. நூற்றுக்கணக்கான சடலங்களைப் புதைத்துள்ளேன். அவர்களில் பெரும்பாலானோர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள்’ என்று நீதிமன்றத்தில் ஒரு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

நாட்டையே அதிர வைத்துள்ள இந்தக் குற்றச்சாட்டை விசாரிக்க, கர்நாடக அரசு 24 பேர் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை நியமித்துள்ளது. இந்தச் செய்தி தேசியளவில் பரபரப்பானது மட்டுமில்லாமல், பழைய சம்பவங்களையும் பேசுபொருளாக்கியுள்ளது.

தட்சிண கன்னட மாவட்டத்தின் பெல்தங்கடி வனப்பகுதியில் அமைந்துள்ள 800 ஆண்டுகள் பழமையான தர்மஸ்தலா கோயிலில் மஞ்சுநாதர் லிங்க வடிவில் காட்சி தருகிறார். இது ஒரு சமணக் குடும்பத்தால் கட்டப்பட்டு பாரம்பரியமாக நிர்வகிக்கப்படுகிறது. இந்த நிலப்பரப்பு ‘குடுமா’ என அழைக்கப்பட்ட காலத்தில், சமணரான வீர்மன்னா பெர்கடே என்பவரின் கனவில் தேவதைகள் தோன்றி, தர்ம காரியங்களுக்காக இந்த இடத்தை அர்ப்பணிக்கச் சொன்னதால் அங்கு மஞ்சுநாதர் கோயில் கட்டப்பட்டதாக வரலாறு சொல்கிறது. அன்றிலிருந்து பெர்கடே தலைமுறையினர் தான் கோயிலை நிர்வகிக்கிறார்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • shivaraman natarajan says:

    அதிர்ச்சி அளிக்கும் செய்தி.தர்மஸ்தலா கோவிலுக்கு அவப்பெயர் உண்டாக்கும் சதிச் செயலாகவும் இருக்கலாம். உண்மௌ வெளிவரவேண்டும்.

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!