கணினித் தொழில்நுட்பம் எனும் போது உலகில் பெரும்பாலான மேசைக் கணினிகளையும் மடிக்கணினிகளையும் ஆட்கொண்டு இருப்பது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விண்டோஸ்தான். ஆப்பிள் அழகியலின் தீவிர ரசிகர்கள் பலர் இருந்தாலும் MacOS இன் ஆதிக்கம் உலகளாவிய ரீதியில் விண்டோஸுக்கு அண்மையில் கூட இல்லை.
அதே போலத்தான் பல அலுவலகங்களிலும் வீடுகளிலும் அன்றாடத் தேவைகளுக்குப் பயன்படும் வேர்ட், எக்செல் போன்ற மென்பொருள்களும் உலகளாவிய ரீதியில் மைக்ரோசாஃப்டின் தயாரிப்புகள்தான் முன்னணியில் நிற்கின்றன. இந்தத் துறையில் மேக் நிறுவனத்தின் மென்பொருள்களின் பயன்பாடு ஒப்பீட்டளவில் மிகவும் குறைவு என்று சொல்லலாம். அண்மைக் காலங்களில் கூகுளின் தயாரிப்புகள் ஓரளவு பிரபலம் அடைந்துள்ளன. பல நிறுவனங்கள் கூகுளின் தயாரிப்புகளையே பயன்படுத்துகின்றன. ஆனாலும் அவர்கள் மற்றைய நிறுவனங்களோடு இணைந்து செயல்படும்போது கூகுள் டாக்ஸிலிருந்து மைக்ரோசாஃப்ட் வேர்டாகத் தரவிறக்கி அனுப்ப வேண்டிய நிலைமையும் உள்ளது.
விண்டோஸ் பற்றியும் வேர்ட், எக்செல் போன்ற மென்பொருள்கள் பற்றியும் அவை உருவான காலத்தில் இருந்து இன்று வரை, காலம் காலமாகப் பலரும் குறை சொல்வது உண்டு. அவர்கள் சொல்லும் குறைகளில் நியாயமும் உண்டு. ஆனாலும் அவற்றைப் புறம் தள்ளி விட்டு முன்னணிக்கு வராவிட்டாலும். பொதுப் பயன்பாட்டில் மைக்ரோசாஃப்ட் மென்பொருள்களுக்கு அண்மையில் கூட இதுவரை எதுவும் வரவில்லை என்பதே யதார்த்தம்.














Add Comment