டென்மார்க்கில் 18 வயதான பெண்கள் ஜூலை ஒன்றாம் தேதி முதல் கட்டாய ராணுவ சேவைக்கு அழைக்கப்பட உள்ளனர். டென்மார்க் அரசு முதன்முறையாகப் பெண்களுக்குக் கட்டாய ராணுவ சேவைக்கான லாட்டரி முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் தன் ராணுவத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.
வடக்கு ஐரோப்பாவின் ஸ்கேண்டினேவிய தீபகற்பத்தின் தெற்கு முனையில் அமைந்துள்ள நாடு டென்மார்க். இது ஜுட் லேண்ட் நிலப்பரப்பையும் 400 தீவுகளையும் உள்ளடக்கியது. அத்தீவுகளில் பெரும்பாலானவற்றில் மனிதர்கள் வசிக்கின்றனர். டென்மார்க் தெற்கில் ஜெர்மனியுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. ஸ்வீடன், நார்வே ஆகியவை டென்மார்க்குக்கு அண்டை நாடுகள். பால்டிக் கடலும், ஆர்டிக் கடலும் டென்மார்க்கைச் சூழ்ந்துள்ளன.
டென்மார்க் 1949 முதல் நேட்டோ (NATO) உறுப்பினராக இருந்து வருகிறது. அமெரிக்கா நேட்டோ உறுப்பினர்களிடம் ரஷ்யாவிடமிருந்து வரக்கூடிய அச்சுறுத்தல்களுக்கு எதிராகத் தயாராக இருக்க வலியுறுத்தி வருகிறது. இதற்காக டென்மார்க் அரசு தனது ராணுவ பலத்தை விரிவுபடுத்தி, பெண்களையும் கட்டாய ராணுவ சேவையில் சேர்க்கும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தியுள்ளது.














Add Comment