நம் முன்னோர்கள் கிட்டத்தட்ட மாதத்தின் அனைத்து நாள்களையும் ஏதாவதொரு காரணம் சொல்லிப் பண்டிகை, நோன்புகளாக மாற்றியிருந்தார்கள். வாழ்நாளின் ஒவ்வொரு தினத்தையும் கொண்டாட்டமாக மாற்றவேண்டும் என்பது தான் அவர்களது எண்ணமாக இருந்திருக்க வேண்டும். இப்போது அப்படியல்ல.
வருடாவருடம் அரசாங்கம் வெளியிடும் பண்டிகைக் கால விடுமுறை அட்டவணையைப் பார்த்திருப்பீர்கள். அதிகபட்சம் பன்னிரண்டு முதல் பதினைந்து பண்டிகைகள்தான் பட்டியலிடப்பட்டிருக்கும். இதில் பெரும்பாலான மக்கள் உச்சபட்சமாக ஆர்வமாகும் ஒன்று தீபாவளி.
குடியரசு / சுதந்திர தினம், கிரிக்கெட் உலகக்கோப்பை வெற்றியைப் போல நாடு முழுவதும் கொண்டாடப்படுவது தீபாவளிப் பண்டிகை ஒன்று தான், ஆனால் கதைகள், காரணங்கள் ஏராளம். வட மாநிலங்களில் பரவலாக ஐந்து நாள்களும் சில பகுதிகளில் ஒன்றிரண்டு நாள்கள் திருவிழாவாகவும் இருக்கிறது. காஷ்மீரோ கன்னியகுமாரியோ, ஒருநாள் கொண்டாட்டமோ ஒருவாரக் கொண்டாட்டமோ… தீபாவளியன்று முழு நாட்டிற்கும் பொதுவானது
இனிப்பு. பலகாரம். தீபம்.
Add Comment