தடுப்பூசி மருந்து மாஃபியாக்களின் வேலை, நாய்களிடம் இதுவரை கண்டுபிடிக்கப்படாத புதிய வைரஸ் பரவல் இருக்கிறது, வழக்கத்தைவிட மூர்க்கமாகக் கடிக்கும்படி யாரோ எதையோ கொடுத்து நாய்களை மாற்றிவிட்டார்கள்- இவையெல்லாம் சமீபத்திய நாய்க்கடிச் செய்திகளால் சமூக வலைத்தளங்களில் நிறைந்திருக்கும் கான்ஸ்பிரசி தியரிகளில் சில.
நாய்கள் தொந்தரவு நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகவே பிரச்சனைதான். 1770-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் சென்னையில் நடந்த நிர்வாகக் கூட்டத்தில் கோட்டைக்குள் வந்து தொந்தரவு செய்யும் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த இரண்டு யோசனைகள் முன்வைக்கப்பட்டன. இதற்கென நியமிக்கப்பட்ட நபரிடம் சடலமாகக் கொண்டு வந்து காண்பிக்கப்படும் ஒவ்வொரு தெரு நாய்க்கும் இரண்டு பணம் பரிசு என்று அறிவிக்க வேண்டும். நாய்களைச் செல்லப் பிராணிகளாக வளர்ப்போர் அவற்றின் கழுத்தில் பெயர் செதுக்கிய கழுத்துப்பட்டையை அணிவிக்கவேண்டும். அன்றைக்கு நாய்களைத் தொந்தரவாக எண்ணிய மேல்தட்டுச் சமூகம், இன்றைக்கு நாய்களின் பாதுகாவலர் அவதாரம் எடுத்திருக்கிறார்கள். ஒரு வகையில் இன்றையச் சிக்கலின் அடிப்படையாக, சமூகப் பிரிவினையும் உள்ளது.
Add Comment