கனவுகளில் பெரும்பாலும் ஏகப்பட்ட லாஜிக் குறைபாடுகள் இருக்கும். முழுக் கனவையும் நினைவுக்கு மீட்டிக்கொண்டு வருபவர்கள் மிகக்குறைவு. பொதுவாக, கனவுகளின் சில பகுதிகள் மட்டுமே நமக்கு ஞாபகம் இருக்கும், அதனாலேயே நாம் அவற்றைக் கண்டுகொள்வதில்லை. கண் விழித்து, அன்றைய நாளைத் தொடங்கிய சில நிமிடங்களில் கனவுகளை மறந்துவிடுவோம். ஆனால் சில விநோதமான கனவுகள் நம்மைத் தொந்தரவு செய்வதும் உண்டு. கனவுகளை வீடியோவாகப் பதிவு செய்துகொண்டால் வசதியாக இருக்குமே என்றுகூட நம்மில் சிலர் நினைத்திருப்போம். அப்படி நினைத்ததை இப்போது சாத்தியமாக்கியிருக்கிறது தொழில்நுட்ப வளர்ச்சி.
நாம் காணும் கனவுகளை வீடியோவாகப் பதிவு செய்யக்கூடிய சாதனமொன்றை அண்மையில் கண்டறிந்துள்ளது மோடம் (Modem) எனப்படும் டச்சு நிறுவனம். கனவுகளைப் பதிவுசெய்யும் முயற்சிகளில் இது முக்கியமானதொரு முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது. இதற்குமுன், ஜப்பானிய விஞ்ஞானிகள் Functional Magnetic Resonance Imaging (fMRI) என்ற தொழில்நுட்பத்தை இதற்காகப் பயன்படுத்தியிருந்தனர். கனவுகளின்போது ஏற்படும் மூளையின் அதிர்வுகளைச் சம்பவங்களாகப் படியெடுப்பதை இத்தொழில்நுட்பம் சாத்தியமாக்கியிருந்தது.
தொழில்நுட்பம் ஒரு பக்கமிருக்கட்டும். முதலில், கனவுகள் ஏன் வருகின்றன?














Add Comment