துபாய் என்றதும் ஆயிரெத்தெட்டு விஷயங்கள் நினைவுக்கு வரும். பிரமாண்டமான கட்டடங்கள் கொண்ட ஷேக் ஜாயித் சாலையைக் கடக்காமல் துபாயை யாரும் தரிசித்திருக்க முடியாது. பதினான்கு வழிச் சாலையில் எப்போதும் வாகன நெரிசல் இருக்கும். ஆனால் சென்ற ஞாயிற்றுக்கிழமை அந்தச் சாலையில் ஆரஞ்சு நிறத்தில் மக்கள் வெள்ளம்போல் திரண்டார்கள். நூறு, ஆயிரம் அல்ல எண்ணிக்கை… இரண்டு லட்சம் மக்கள் ஓடினார்கள். மாரத்தான் இல்லை. அனைவராலும் மாரத்தான் ஓட முடியாதல்லவா? ஆனால் துபாய் ஃப்ரீ ஃபன் ரன்னில் தத்தித் தத்தித் தவழும் குழந்தைகூடச் சேர்ந்து கொண்டது.
2017-ஆம் ஆண்டு துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான் நாட்டு மக்களின் உடல்நலம் கருதி ‘துபாய் ஃபிட்னஸ் 30 • 30’ என்ற நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். அதாவது ஒரு மாதம் முப்பது நாள்களில் முப்பது நிமிடம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பது தான் அடிநாதம். இந்த வருடம் அக்டோபர் இருபத்தெட்டாம் தேதி ஆரம்பித்த ஃபிட்னஸ் நவம்பர் இருபத்தாறாம் தேதி நிறைவடைந்தது.
Add Comment