கடந்த வியாழனன்று, 156 மருந்துகளை மத்திய அரசு தடை செய்தது. இவை எல்லாமே Fixed Dose Combination மருந்துகள். அம்மருந்துகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோகத்தை முற்றிலும் நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வகை மருந்துகளின் மீதான பெரியளவிலான சட்ட நடவடிக்கைகளை அமைச்சகம் எடுத்திருப்பது இது இரண்டாவது முறை. 2016 ஆம் ஆண்டு 344 மருந்துகள் தடை செய்யப்பட்டிருந்தன.
பிக்சட் டோஸ் மருந்துகள் என்றால் என்ன? எதனால் அவை தடைசெய்யப்பட்டிருக்கின்றன? என்பதைக் குறித்து சென்னையைச் சேர்ந்த மருத்துவர் கிருத்திகா வள்ளியிடம் பேசியதிலிருந்து.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாத்திரைகளைத் தனித் தனியே கொடுப்பதற்குப் பதில் அதனை ஒரே மருந்தாகத் தருவது தான் Fixed Dose Combination. நோயாளிகளின் சிரமத்தைக் குறைப்பதற்காக மருத்துவர்கள் இதனைப் பரிந்துரைப்பார்கள்.காய்ச்சல், சளி, ரத்தக்கொதிப்பு, சர்க்கரை, கொழுப்பு இருப்பவர்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட நுண்ணுயிர் எதிர்ப்பு மாத்திரைகள் தேவைப்படும். அந்தச்சமயத்தில் இவ்வகை மருந்துகளைப் பரிந்துரைப்போம். வலி நிவாரணிகள், உயிர்ச்சத்து சத்து மாத்திரைகளிலும் இந்தக் கலவை மருந்துகள் கிடைக்கின்றன.
Add Comment