தமிழ்நாட்டில் முப்பத்தைந்து வயதுக்கு மேற்பட்ட பெண்களில் பெரும்பாலானவர்கள் சீரியல் பார்க்கிறார்கள். ஆனால் பொது வெளியில் தாம் பார்த்து ரசிக்கும் சீரியல்களைப் பற்றி அவர்கள் பேசுவதில்லை, எழுதுவதில்லை. தம் வாழ்வோடு அந்தரங்கமாக ஒன்றிவிட்ட ஓர் அங்கமாகவே சீரியல்களை எண்ணுவோர் அதிகம். தமிழ் மெகா சீரியல்களின் எந்த அம்சம் அவர்களை அவ்வாறு உணரச் செய்கிறது?
முதலில் நாம் சந்தித்தது ராணி அக்காவை. பவ்யமாக சமையல் பணி ஆற்றிக் கொண்டிருந்தவர், தேங்காய் நறுக்குவதை நிறுத்தவில்லை. அப்படியே புகைப்படத்திற்கும் முகம் கொடுத்தார். சீரியல் என்று பேச்செடுத்துதான் தாமதம். மடமடவென்று தேங்காய் நறுக்குவதில் வேகம் காட்டினார். அதே வேகத்தில் வார்த்தைகளும் வந்து விழுந்தன.
Add Comment