ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது அதில் நடிக்கும் கதாநாயகனை வைத்து மட்டும் நிர்ணயிக்கப்படுவதில்லை. ஓடும் நாட்களை வைத்து விழா எடுப்பது ஒழிந்து போய் மாமாங்கமாகி விட்டது. எவ்வளவு நாட்கள் என்பது குறித்தல்ல பேச்சு. எவ்வளவு கோடி வசூல் என்பதுதான் காரணி. ‘பாக்ஸ் ஆபீஸ்’ என்பதுதான் வெற்றியை நிர்ணயிக்கும் மந்திரச் சொல்.
திரைப்படங்களை அடுத்து இப்பொழுது மக்கள் மனதில் ஓடும் எண்ணங்கள் தங்கள் வேட்பாளர்களின் சொத்து மதிப்புகள் குறித்துத்தான். அறிந்து கொள்வதால் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை, என்றாலும்… அடுத்தவர் சொத்துக்கள் பற்றித் தெரிந்து கொள்ள விழையும் ஆர்வம் உளவியல் சார்ந்தது. இருபத்தி நான்கு மணி நேரமும் செய்திகள் தந்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ள பல்வேறு விதமான ஊடகங்களுக்கு இது மிகப்பெரிய தீனி.
வேட்பாளர்களைப் பொறுத்த வரை அவர்களது சொத்து மதிப்பு என்பது தேர்தலில் அவர்கள் போட்டியிடத் தகுதியை நிர்ணயிக்கும் ஒரு மந்திரக்கோல். ஒருவர் எவ்வளவு செலவு செய்ய முடியும் என்பதை வைத்துத்தான் அவருக்குச் சீட்டே கொடுக்கப்படுகிறது. அவர்கள் செய்யும் செலவைப் பொறுத்துத்தான் அடுத்த கட்டத் தலைவர்களும் உழைப்பார்கள். தொண்டர் படையும் வேலை செய்யும்.
அந்த வகையில் தமிழகத்தில் நாளை மறுநாள் நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தல் வேட்பாளர்கள் சொத்து மதிப்புக் குறித்து இப்பொழுது கவனம் திரும்பியுள்ளது. அதிலும் யாரும் எதிர்பாராத வகையில் ஒரு வேட்பாளர் தனது சொத்து மதிப்புக் குறித்து வெளியிட்டுள்ள தரவுகள் பழுத்த அரசியல் வாதிகள், மேல்மட்ட தலைவர்கள்கூட வெட்கப்படுமளவு உள்ளது. தேர்தல் கால பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் குறித்து மேல் விவரங்கள் தேடினோம்.
தெலுங்கு தேச கட்சியில் ஒருவர் பெம்மசானி சந்திரசேகர் என்பவர் தனது சொத்தாக ரூ.5785 கோடி இருப்பதாக தகவல் சொல்லி இருப்பதாக இன்றைய(24.04.2024) தினத்தந்தி செய்தித்தாளில் பார்த்தேன். வரும் தேர்தலில் இன்னும் சில கட்ட தேர்தலில் பிராமண பத்திரம் வெளியிடும்போது தான் அதிக சொத்து வைத்திருப்பவர் தெரிய வரும்.