Home » காலாவதித் தேதி பொய்யா கோப்ப்பால்?
மருத்துவம்

காலாவதித் தேதி பொய்யா கோப்ப்பால்?

தலைவலிக்கோர் மாத்திரை தடுமனுக்கோர் மாத்திரை என்று மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்ளாத மனிதர்களே இல்லை. அது ஊட்டச்சத்துக்கான இணை உணவாகட்டும், இதய நோயைக் குணமாக்க மருத்துவர் பரிந்துரை செய்த மருந்தாகட்டும். எதுவானால்தான் என்ன? வருடத்திற்கு 1.48 டிரில்லியன் டாலர்கள் மருந்து மாத்திரைகளில் அகிலமே செலவு செய்துகொண்டிருக்கிறது.

கருவாக இருக்கும் போதே மூளை வளர்ச்சிக்காக அன்னையின் பிளசென்டா வழியாக ஃப்பொலிக் அமிலமும் எலும்பு வளர்ச்சிக்கான கால்சியமும் எடுத்துக்கொள்ளத் தொடங்குகிறோம். நாளாக நாளாகத் தலைவலிக்கொரு டைலினால், கால்வலிக்கொரு அட்வில் என வளர்கிறோம். வயது கூடிய பிறகு, இதய நோய்க்கொரு பிஸ்ட்டால், தேவைக்கேற்ப ஜெலுசில் எனச் சேர்த்து முடிவே இல்லாமல் நீண்டுகொண்டே போகிறது இந்தப் பட்டியல்.

பாட்டிலில் பாதிக்கு மேல் இருக்கும் காலாவதியான மாத்திரைகளைக் குப்பையில் கொட்ட நினைக்கும் போது, மாத்திரைகளின் விலை நினைவுக்கு வந்து நெஞ்சைப் பிசைகிறது. இவை எல்லாமே வேதிப்பொருள்கள் தானே, காலாவதியாகி ஓரிரண்டு மாதங்கள்தானே, உபயோகப்படுத்தினால்தான் என்ன என்று பயன்படுத்தவும் துணிச்சல் வரவில்லை.

உண்மையில், மருந்துகளின் காலாவதித் தேதியில் அவை யாவும் திடீரென வீரியத்தை இழந்துவிடுமா? அந்தத் தேதிக்கு முன்னால் இருந்தே வீரியம் குறைய ஆரம்பிக்குமா? இல்லை அந்த தேதிக்குப் பிறகுதான் குறைய ஆரம்பிக்கிறதா? அப்படி என்றால் மருத்துவர் பரிந்துரைக்காத மருந்துகளை ஒன்றிற்குப் பதிலாக இரண்டு என எடுத்துக்கொள்ளலாமா? யார் எப்படி அந்த தேதிகளை நிர்ணயிக்கிறார்கள்?

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!