Home » ஒரே நொடியில் ஒட்டுமொத்த நெட்ஃபிளிக்ஸ்!
நுட்பம்

ஒரே நொடியில் ஒட்டுமொத்த நெட்ஃபிளிக்ஸ்!

ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் குழு உலகின் அதிஉயர் வேக இணையப் பயன்பாட்டைச் சாத்தியப்படுத்தியுள்ளனர். இந்த மின்னல் வேக இணையத்தின் மூலம் நெட்ஃபிளிக்ஸ் இணையதளத்தில் உள்ள எல்லாப் படங்களையும் ஒரு வினாடிக்குள் தரவிறக்கம் செய்து விட முடியும். ஸ்பாட்டிஃபை தளத்திலுள்ள 100 மில்லியன் பாடல்களைக் கணப்பொழுதில் பதிவிறக்கம் செய்துவிடலாம். இது இந்தியாவின் சராசரி இணைய வேகமான 60 Mbpsஐ விடச் சுமார் 16 மில்லியன் மடங்கு வலிமையானது. அமெரிக்காவின் சராசரி இணைய வேகத்தை விட 3 மில்லியன் மடங்கு வேகமானது.

ஜப்பானின் தேசியத் தகவல் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனம் (NICT) , சுமிடோமோ எலக்ட்ரிக் மற்றும் ஐரோப்பியக் கூட்டுப் பணியாளர்கள் அமைப்புடன் இணைந்து இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்த ஆராய்ச்சிக்காக, பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் பயன்படுத்தப்பட்டன. சுமார் 1,800 கிலோமீட்டர் தொலைவுக்கு இந்த கேபிள்களின் மூலம் தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டது. ஒப்பீட்டளவில் சென்னையிலிருந்து பஞ்சாப் வரையிலான நீளமுள்ள ஃபைபர் ஆப்டிக் கேபிள்களின் மூலம் தகவல் பரிமாற்றம் நடந்துள்ளது.

ஜப்பானின் மின்னல் வேக இணையச் சாத்தியத்தை நடைமுறைப்படுத்த, வழக்கமான ஒற்றை கேபிளை அவர்கள் பயன்படுத்தவில்லை. மாறாக அதே அளவிலான 19 தனித்தனி கேபிள்களைப் பயன்படுத்தியுள்ளனர். இதை இணையப் போக்குவரத்துக்கான 19 வழி சூப்பர்ஹைவே என்று விவரிக்கின்றனர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!