எப்போதெல்லாம் சிறிய இடைவெளி கிடைக்கிறதோ அப்போது கிடைக்கும் இடைவெளி நேரத்தில் முடித்து விடக்கூடிய வேலையை முடித்தல் – Filling gap
ஒரு திட்டத்தில் செய்ய வேண்டிய பணிகளை முடித்துவிட்டு இன்னொன்றை ஆரம்பிக்கும் முன் கிடைக்கும் சிறிய இடைவெளியில் செய்து முடிக்கக் கூடிய ஒரு காரியத்தைச் செய்யலாம். எடுத்துக்காட்டாக, பிள்ளைகளைப் பள்ளியைத் தாண்டிய பொழுதுபோக்குப் பயிற்சிகளில் (விளையாட்டு, கராத்தே, பாட்டு வகுப்புகள்) காத்திருக்க நேர்ந்தால், அந்த நேரத்தில் கையோடு கொண்டு செல்கிற புத்தகத்தைப் படிக்கலாம். அடுத்த நாளுக்கான வேலை அட்டவணையைச் சிந்தித்து எழுதலாம் இல்லை எனில் தனிப்பட்ட அலுவல் சாராத மின்மடல்களுக்குப் பதில் எழுதலாம் அல்லது நீண்டகாலமாகப் பேச நினைத்த நண்பருக்கு தொலைபேசலாம். இப்படிப் பல காரியங்களை முடிக்க முடியும்.
வீட்டில் தோசை வார்க்கிறபோதே, சிந்தனை தேவையில்லாத சில இயந்திரத்தனமான வேலைகளைச் (காய்கறிகள் நறுக்குவது ) செய்ய முடியும். அல்லது, வாரம் முழுவதற்குமான உணவுப் பட்டியல், அதற்குத் தேவையான பொருட்கள் வாங்குவதற்கான பட்டியலைத் தயாரித்து வைத்துக்கொள்ளலாம். இது தினமும் என்ன செய்ய வேண்டும் என யோசிப்பதையும் பொருட்கள் தேடுவதையும் குறைக்கும். பட்டியல் தயாரித்து இருந்தால், அங்காடியிலும் விரைவாகப் பொருட்களை எடுத்துக்கொண்டுவிடலாம்.
Add Comment