ஜெர்மனிக்கு அடுத்தபடியாக ஐரோப்பிய ஒன்றியத்தின் இரண்டாவது மிக முக்கியமான நாடு ஃபிரான்ஸ். சுதந்தரம், சமத்துவம், சகோதரத்துவம் எனும் மூன்று கொள்கைகளால் பெருமைப்படும் நாடு. ஆனால் இன்றோ அந்நாட்டின் அரசியல் சமநிலை ஆட்டம் கண்டுள்ளது.
ஃபிரான்ஸின் ஜனாதிபதியான இம்மானுவேல் மேக்ரோன், செப்டம்பர் ஒன்பதாம் தேதி ஃபிரான்ஸ் பிரதமராக செபாஸ்டியன் லெகார்னுவை நியமித்தார். இவர் ஜனாதிபதி மேக்ரோனின் நெருங்கிய நண்பர். கடந்த 14 மாதங்களில் நான்காவது புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். அதற்கு முன், கடந்த மூன்று வருடங்களாகப் பாதுகாப்பு அமைச்சராகப் பணியாற்றினார்.
ஆனால் பதவியேற்ற 27 நாட்களிலேயே, அதுவும் அமைச்சரவையை உருவாக்கிய 14 மணிநேரத்துக்குள் அமைச்சரவையைக் கலைத்தார் செபாஸ்டியன். தன் பிரதமர் பதவியையும் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இது ஃபிரான்ஸ் வரலாற்றின் மிகக் குறுகியகால அரசாங்கம் ஆகும்.















Add Comment