ஜி20 உச்சி மாநாடு, நவம்பர் 22, 23 ஆகிய தேதிகளில் தென் ஆப்பிரிக்காவிலுள்ள ஜோஹனஸ்பர்க்கில் நடைபெற உள்ளது. இது ஆப்பிரிக்கக் கண்டத்தில் முதன்முறையாக நடைபெறுகிறது. பல்வேறு நாட்டின் தலைவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைத்தளப் பதிவில், ‘ஜி20 உச்சி மாநாடு ஆப்பிரிக்காவில் நடைபெறுவது அவமானகரமானது. அங்குள்ள ஆப்பிரிக்கானர்கள் (Afrikaners) படுகொலை செய்யப்பட்டு, அவர்களது நிலங்களும் பண்ணைகளும் சட்டவிரோதமாகப் பிடுங்கப்படுகின்றன. இந்த மனித உரிமை மீறல்களைக் கருத்தில் கொண்டு, அமெரிக்காவிலிருந்து எந்தப் பிரதிநிதியும் கலந்து கொள்ளப் போவதில்லை’ எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தக் குற்றச்சாட்டின் உண்மை நிலவரம் என்ன?
தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரத்திலிருந்து புறப்படும் N2 தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக நின்று பார்த்தால், ஒரு நீண்ட தரைவழிப் பாதையை மட்டுமல்ல, தென் ஆப்பிரிக்கா கடந்து வந்த இனவெறிப் பாதையையும் பார்க்க முடியும். ஒரு பக்கம் ஸ்ட்ராண்ட் (Strand) என்கிற அழகான கடற்கரையோரக் குடியிருப்புப் பகுதி. இங்கு வெள்ளையினத்தவர்கள் பெரும்பான்மை. அகலமான சாலைகள், தோட்டத்துடன் கூடிய பெரிய வீடுகள், இணையம் (Internet), குழாய்த் தண்ணீர் எனப் பூலோகச் சொர்க்கம். இன்னொரு பக்கம் நோம்சோமோ (Nomzamo) குடியிருப்புகள். இங்கு கறுப்பினத்தவர்கள் பெரும்பான்மை. நெருக்கமான தகரக் கொட்டகைகள். இங்கு இணையம், குழாய்த் தண்ணீர் எல்லாம் ஆடம்பரம்.














Add Comment