அந்தப் படம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. அரங்கு நிறைந்த காட்சிகள். முதலில் எழுநூற்று சொச்சத் திரைகளில்தான் வெளியிடுவதாகத் திட்டம். இளைஞர்கள் அளித்த அபாரமான வரவேற்பைப் பார்த்து சுமார் இரண்டாயிரம் திரைகளில் வெளியிட்டனர். மல்டிபிளக்ஸ் திரையரங்குகள், வழக்கத்தை மீறி அதிகாலை ஐந்து மணிக் காட்சிகளைப் போட்டன. ஒரு வாரத்துக்குள்ளாகவே படம் ஐம்பது கோடி வசூலை ஈட்டியது.
அப்படி என்ன பான் இந்தியா படம் வந்தது என்று யோசித்தால் நிச்சயம் நீங்கள் பூமர்தான். மேலே சொன்ன சாதனைகளை ஈட்டியது ஒரு அனிமே படம். பெயர் – டெமன் ஸ்லேயர் (Demon Slayer). மூலம், ஜப்பான் மாங்கா காமிக்ஸ். F1, சூப்பர்மேன் போன்ற ஹாலிவுட் படங்களைத் தாண்டி இந்தப் பிரம்மாண்ட வெற்றியைச் சாத்தியமாக்கியவர்கள் பெரும்பான்மையாக ஜென் ஸீ இளைஞர்கள்.
திரைப்படங்கள், இணையத் தொடர்கள், குறும்படங்கள் என இங்கேயே எல்லாவிதமான பொழுதுபோக்கு வகைகளும் தயாரிக்கப்படுகின்றன. அவற்றையெல்லாம் மீறி, ஜப்பான் நாட்டு கார்ட்டூன் மீது இந்திய இளைஞர்கள் மோகம் கொள்ளக் காரணம் என்ன? அதில் அப்படியென்ன புதுமை இருக்கிறது?














Add Comment