குரூப்-I முப்பத்தேழு வயது வரை தான் எழுத முடியும். குரூப்-2-ஐப்போல் இந்தத் தேர்வும் முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என்று மூன்று நிலைகளைக் கொண்டது.
வழக்கம்போல் முதல்நிலைத் தேர்வை முடித்ததும் நாம் வெற்றி பெற்றுவிடுவோம் என்று தெரிந்ததும் முதன்மைத் தேர்விற்குத் தயாராகிவிட வேண்டும்.
இதற்கு நான்கு தேர்வுகள் நடக்கும். தமிழ் தகுதித் தேர்விற்கு மூன்று மணி நேரம் நூறு மதிப்பெண்களுக்கு எழுத வேண்டும். டிஸ்கிரிப்டிவ் டைப் என்போம். இதுதான் முதல் தாள். இதில் நாற்பது மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி. இதில் தேர்ச்சி பெற்றால்தான் மற்றத் தேர்வின் தேர்ச்சி செல்லுபடியாகும். ஆங்கில வழிப் படித்த மாணவர்களும் எளிதாக நாற்பது எடுத்துவிட முடியும். பத்தாம் வகுப்புத் தரத்தில் தான் கேள்விகள் இருக்கும். அதற்காக பயந்துகொண்டு தமிழையே படித்துக் கொண்டிருக்க வேண்டாம். அதில் 99 எடுத்தாலும் பதவியைத் தீர்மானிக்கும் அடுத்தடுத்த தாள்களின் மதிப்பெண்களில் சேராது.
Add Comment