‘பல ஆண்டுகளாக இமயமலையின் அடியில் ஆழமாக ஒரு பெரிய பூகம்பம் உருவாகிக்கொண்டிருக்கிறது. அது நிகழ்ந்து, நிலநடுக்கம் ஏற்பட்டால் அது வட இந்தியாவில் பேரழிவை ஏற்படுத்தும். 8 முதல் 8.9 ரிக்டர் அளவு வரை எட்டும். இது யூகம் அல்ல. நிச்சயமாக நிகழக் கூடியது.’ என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இமயமலைப் பெரும் நிலநடுக்கம் (Great Himalayan Earthquake) என்று இதை அழைக்கிறார்கள்.
‘இமயமலையில் ஏற்படக்கூடிய நிலநடுக்கம், பெருங்கடலில் ஏற்படாமல் நேரடியாக நிலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.’ என்று அமெரிக்க முன்னணி புவிஇயற்பியலாளர் ரோஜர் பில்ஹாம் எச்சரித்துள்ளார். இவர் நிலவியல் துறைப் பேராசிரியராக கொலராடோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவர். கடந்த ஆயிரம் ஆண்டுகளில் இமயமலையில் ஏற்பட்ட பூகம்பங்களின் பதிவுகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டார்.
இதுபற்றி அவர் கூறும்போது ஒவ்வொரு நூறு ஆண்டுகளுக்கும் திபெத்தின் தென்முனையில் இரண்டு மீட்டர் அளவுக்கு இந்தியா சரிந்து கொண்டிருக்கிறது. இந்தச் சரிவால் சில நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை சுமார் எட்டு ரிக்டர் அளவில் நிலநடுக்கம் இமயமலையைத் தாக்கியிருக்கிறது. கடந்த எழுபது ஆண்டுகளில் இமயமலையில் அழுத்தம் எதுவும் வெளிப்படாமல் உள்ளது. அதனால் அடுத்த அழுத்தம் கடுமையாக இருக்கும் என்கிறார்.














Add Comment