Home » ஹிஸ்புல்லா இனி என்ன செய்யும்?
உலகம்

ஹிஸ்புல்லா இனி என்ன செய்யும்?

முஹம்மத் நிமா நாஸர்

அமெரிக்கர்கள் உயிருக்கு உத்திரவாதம் இல்லை, லெபனான் பக்கம் போக வேண்டாம் என்று அமெரிக்க அரசு அறிவித்தாகிவிட்டது. டச்சு வெளியுறவு அமைச்சகம், “லெபனான் பாதுகாப்பற்றதும் கணிக்க முடியாததுமான நிலையில் இருக்கிறது” என்று கூறியுள்ளது. கனடாவோ, “வாய்ப்பிருக்கும்போதே திரும்பி வந்துவிடுங்கள்” என்று தங்கள் மக்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளது. ரஷ்யா, இந்தியா, ஜோர்டன் போன்ற மேலும் பல நாடுகளும் இம்மாதிரித் தெரிவித்துள்ளன. வரும் ஆனா வராது என்கிற நிலையில் இருந்த இஸ்ரேல் – ஹிஸ்புல்லா போர்மேகம் இன்னும் கறுத்து போர் வந்துவிடும் என்கிற பதட்டத்தைக் கூட்டியுள்ளது.

ஹிஸ்புல்லா ட்ரோன்களை அனுப்பிப் படங்காட்டிய பிறகு இரு பக்கமும் தாக்குதல் எண்ணிக்கை கொஞ்சம் கூடியது. ‘நீங்க நிறுத்தினா, நாங்களும் நிறுத்திடுவோம்’ என்று காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலைச் சுட்டிக் காட்டி ஹிஸ்புல்லா தெரிவித்து வருகிறது. அங்கே தினமும் கொல்லப்படுவோர் எண்ணிக்கை ஐம்பதுக்குக் கீழே வந்துவிட்டது. ஆனால் முற்றிலும் நிறுத்தும் எண்ணம் இஸ்ரேலுக்கு இல்லை. அப்படி நிறுத்தினாலும் ஹிஸ்புல்லா தன் தாக்குதலை நிறுத்திவிடும் என்று இஸ்ரேல் நம்பவில்லை.

அதுபோக ட்ரோன் மிரட்டலைத் தீவிரமாக எடுத்துக் கொண்டு பதிலடி கொடுப்பதில் முனைப்பாக இருந்தது இஸ்ரேல். தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் ஒன்றில் அபு நிம்மாவைப் போட்டுத் தள்ளியது. ஹிஸ்புல்லாவின் உயர் பொறுப்பில் இருந்த மூத்த கமாண்டர் இவர். சொல்லப்போனால் கடந்த ஒன்பது மாதங்களில் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர்களில் அதியுயர் பொறுப்பில் இருந்தவர் இவர்தான். முழுப்பெயர் முஹ்மத் நிமஹ் நஸீர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!