Home » உடலுக்குள் ரோபோக்கள்: ஒரு நுட்ப சாகசம்
இன்குபேட்டர்

உடலுக்குள் ரோபோக்கள்: ஒரு நுட்ப சாகசம்

ரோபோ என்பது பல இடங்களில் காணப்படும் தொழில்நுட்பம். பொதுவாகத் தானியங்கியாக இயங்கக் கூடிய இயந்திரமே ரோபா. உணவகத்தில் உணவு பரிமாறும் ரோபோ, பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ரோபோ எனப் பலவிதமான ரோபோக்கள் இப்போது பயன்பாட்டில் உள்ளன. செயற்கை நுண்ணறிவின் திறனோடு இந்த ரோபோக்களின் திறனும் பயன்பாடும் அதிகரித்து வருவதை அவதானிக்கலாம். ஆனால் இந்த ரோபோக்கள் எல்லாம் பெரிய உருவம் கொண்ட இயந்திரங்கள். மிகவும் சிறிய நானோ ரோபோக்களும் உள்ளன. மருத்துவத் துறையில் அவற்றின் பயன்பாடுகளுக்கான ஆய்வுகள் பல ஆய்வுக்கூடங்களில் இடம்பெறுகின்றன.

நானோ ரோபோ என்றால் அதன் அளவு எவ்வளவு இருக்கும் என்று முதலில் பார்ப்போம். மில்லி மீட்டர் என்றால் எவ்வளவு சிறியது என்பது நமக்குத் தெரியும். அதில் ஆயிரத்தில் ஒரு பங்குதான் மைக்ரோ மீட்டர். அந்த மைக்ரோ மீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்குதான் நானோ மீட்டர் எனப்படும் அளவு. அதாவது ஒரு பில்லியன் நானோ மீட்டர்களே ஒரு மீட்டராகும். இது கண்ணுக்குத் தெரியும் அளவல்ல. மிகவும் சிறியது. நானோத் தொழில்நுட்பம் என்றால் பொதுவாக ஒன்றிலிருந்து சில நூறுகள் நானோ மீட்டர்கள் அளவான பொருட்களைக் கொண்ட தொழில்நுட்பமாகும்.

இவ்வளவு சிறிய ரோபோவினால் என்ன பயன் கிடைக்கக் கூடும்? நானோ ரோபோக்களால் பல துறைகளிலும் பயன் உண்டு. இக்கட்டுரையில் நாம் பார்க்கப் போவது மருத்துவத் துறையில் இவற்றை எப்படிப் பயன்படுத்தலாம் என்பது மட்டுமே.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!