Home » விண்வெளிக் கண்ணாடி
இன்குபேட்டர்

விண்வெளிக் கண்ணாடி

வளிமண்டல மாற்றங்களால் உலகின் வெப்பநிலை மற்றும் கால நிலைகளில் மாற்றம் ஏற்படுகிறது என்பது யாவரும் அறிந்ததே. கரியமில வாயு எனப்படும் CO2 இந்த வளிமண்டலத்தை மாசுபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சூரிய ஒளியினால் இயற்கையாகப் பூமியில் வெப்பம் ஏற்படுகிறது. இதனை CO2 அதிகம் கொண்ட வளிமண்டலம் வெளியே போக விடாது பூமியிலேயே ஓர் அரண் போல் தடுத்து வைத்திருக்க உதவுகிறது. இது பூமியின் வெப்ப நிலை ஏற்றத்துக்கு ஒரு முக்கிய காரணி என்பது விஞ்ஞானிகளின் கருத்து.

இதற்காக நாடுகள் பலவும் தங்கள் CO2 வினை அதிகமாக வெளியேற்றும் காரணிகளைக் கணிசமானளவு குறைப்பதில் கவனம் செலுத்துகின்றன. பெட்ரோல் டீசல் போன்ற எரிபொருட்களின் பாவனையைக் கட்டுப் படுத்தி மின்சார வாகனங்களை நோக்கி உலகம் போவதற்கு இதுவும் ஒரு காரணமாகும். பல பெரிய நிறுவனங்களும் தங்கள் செயல்பாட்டால் வரக்கூடிய CO2 வெளியேற்றத்தினைக் குறைப்பதற்கான கொள்கைகளை அமல் படுத்துகின்றனர். இது ஒரு வகையில் வாடிக்கையாளர்களுக்கு நாமும் எமது சூழல் பற்றியும் சிந்திக்கிறோம் என அவர்கள் பிரகடனப் படுத்தும் செயலாகும்.

கரியமில வாயுவை வளிமண்டலத்தில் சேர்ப்பதை ஓரளவு குறைத்தாலும் நாம் தற்போதுள்ள நிலையில் சூழலியல் மாற்றங்களைத் தடுக்குமளவு வேகமாக மாற்றங்களைக் கொண்டு வர முடியாது என்பதே யதார்த்தம். அதற்கு என்ன செய்யலாம் எனப் பல விஞ்ஞானிகள் ஆய்வில் ஆய்வு செய்கிறார்கள். இத்துறையினை ஜியோ எஞ்சினியரிங் (Geo Engineering) என அழைக்கிறார்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!