Home » செயற்கைக் கண்
இன்குபேட்டர்

செயற்கைக் கண்

ஐம்புலன்கள் நாம் முழுமையாக இவ்வுலகில் செயற்படுவதற்கு முக்கியமானவையாகும். இவற்றில் ஒன்று முழுமையாகச் செயற்படாவிடின் அது எமது வாழ்க்கையில் பல சிரமங்களை உருவாக்கும். இந்த ஐம்புலன்களில் பார்வை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். பார்வையற்றவர்களின் வாழ்வு மிகவும் கடினமானது. ஒரு சில நிமிடங்கள் கண்களை மூடிக் கொண்டு எதையாவது செய்ய முயற்சி செய்து பாருங்கள். நாம் சர்வ சாதாரணமாகச் செய்யும் பல காரியங்கள் பார்வையற்றோருக்கு எவ்வளவு கடினமானவையாக இருக்கும் என்பது, அப்போது புலப்படும்.

நமக்குப் பார்வை எப்படி வருகின்றது? பார்வைப் பொறிமுறை எப்படி வேலை செய்கிறது என்பது மிகவும் சிக்கலான விஷயம். இதை மிகவும் எளிமையாகப் பார்த்தோமானால் ஒளி எமது கண்ணுக்குள் செல்கிறது. முன்பகுதியில் உள்ள லென்ஸ் அந்த ஒளியினைக் கண்ணின் பின் பகுதியிலுள்ள ரெட்டினா எனப்படும் இடத்தில் குவிக்கிறது. ரெட்டினாவில் உள்ள கலங்கள் இந்த ஒளியினால் தூண்டப்பட்டு மூளைக்கு சிக்னல்களை நரம்புகள் மூலம் அனுப்புகின்றன. மூளை அந்த சிக்னல்களைப் புரிந்து கொள்வதன் மூலம் நமக்கு முன்னால் இருப்பவற்றை நாம் பார்க்கிறோம். இதுதான் பாவையின் அடிப்படைப் பொறிமுறை.

ஒருவரின் கோர்ணியா எனப்படும் கண்ணின் முற்பகுதியை ஒளி அடைவதிலிருந்து மூளை அதனை விளங்கிக் கொள்வது வரையிலான பாதையில் எங்கு இடையூறு இருந்தாலும் அவருக்கு ஒரு பார்வைக் குறைபாட்டை ஏற்படுத்தும். எல்லாக் குறைபாடுகளும் பார்வையை முழுமையாகப் பாதிப்பவையல்ல. நமது கண் வில்லைகள் ஒளியைப் பின்னாலுள்ள ரெட்டினாவில் குவிக்கும் திறனில் குறைபாடுகள் இருக்குமாயின் அவற்றை நாம் கண்ணாடி அணிவதன் மூலம் நிவர்த்தி செய்யலாம். கண் வில்லைகளில் வயதாகும் போது பொதுவாகவே வரும் களங்கங்களை காட்டராக்ட் என்று சொல்வார்கள். இன்றைய காலத்தில் அதுவும் ஒரு பிரச்சினை இல்லை. காட்டராக்ட் சத்திர சிகிச்சை மூலம் கண்ணின் வில்லைகளை மாற்றி விடலாம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!