தவாங் – அருணாசலப் பிரதேச மாநிலத்திலிருக்கும் இந்தியாவின் எல்லைப் பகுதி. கடல் மட்டத்திலிருந்து பதினோராயிரம் அடிக்கும் மேல் உயரத்திலிருக்கும் இயற்கை எழில் சூழ்ந்த மலைப் பிரதேசம். பிரம்மாண்டமான நீர் வீழ்ச்சிகளைக் கொண்டது. இந்தப் பகுதியைச் சர்வதேச சுற்றுலாத் தளமாக மாற்ற இந்தியா உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறது. சீன – பூட்டானின் எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் இந்தப் பகுதியைத்தான் சீன ராணுவம் குறிவைத்திருக்கிறது. இந்தப் பகுதியை ஆக்கிரமிப்பதன் மூலம் திபெத்தையும், அருணாசலப் பிரதேசத்தையும் முழுமையாக எட்டிப் பார்க்க முடியுமென்பது சீனாவின் பேராசை.
இதைப் படித்தீர்களா?
நிச்சயமாகவே அவன் ஒரு சாமானிய மனிதனல்லன். அதில் எங்கள் யாருக்கும் இரண்டாம் கருத்தில்லை. ஆனால் எந்த விபரீதத்துக்கும் இதுவரை அவன் காரணமாக இருந்ததில்லை.
கடமை என்ற சொல்லில் அனைத்தையும் நியாயத்தின் வட்டத்துக்குள் கொண்டு நிறுத்திவிட முடியும்தான். ஆனால் அதன் உள்ளோடிய கள்ளத்தனத்தை விழிப்புடன் கவனித்தேன்.















Add Comment