இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) கடந்த ஜூலை பதிநான்காம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து அனுப்பிய சந்திரயான் 3 செயற்கைக்கோள் ஆகஸ்ட் இருபத்தி மூன்றாம் தேதி மாலை 06.04 மணிக்கு நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. அந்நிகழ்வை ISRO அதிகாரப்பூர்வ யுடியூப் சானலில் எணபது லட்சம் மக்கள் நேரலையில் கண்டுகளித்தார்கள்.
அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவைத் தொடர்ந்து நிலவில் விண்கலத்தைத் தரையிறக்கிய நான்காவது நாடாகவும், தென் துருவத்தில் இயந்திரக் கால்களைப் பதித்த முதல் நாடாகவும் வரலாற்றில் இடம்பிடித்திருக்கிறது இந்தியா. இச்சாதனையைப் போகிற போக்கில் சும்மா செய்துவிடவில்லை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம். நிறையத் தடைகள், சோதனைகள் மற்றும் தோல்விகள் எனப் பல எதிர்மறைப் படிகளில் ஏறி நிலவில் கால்களைப் பதித்திருக்கிறது.
சந்திரனுக்கு அனுப்பப்பட்ட மூன்று சந்திரயான் திட்டங்களுக்கும் செவ்வாய்க் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட மங்கள்யான் திட்டங்களுக்கும் இயக்குநர்களாகப் பணியாற்றியவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தமிழர்களுக்குப் பெருமைக்குரிய விஷயம். இந்தியாவை நிலவுக்கும் செவ்வாய்க்கும் அழைத்துச் சென்ற தமிழர்கள் நால்வர்.
Add Comment