இலங்கையை பௌத்தத் தூபிகளின் தேசமெனச் சொல்வார்கள். இந்தத் தீவின் எப்பகுதிக்குச் சென்றாலும் வானளாவிய தூபிகள் வியாபித்திருக்கும். இந்தத் தூபிகளின் தீவில் முதலில் தோன்றிய பௌத்த மடாலயம் எதுவாக இருக்குமென நினைக்கிறீர்கள்? இசுறுமுனியா விகாரையே இலங்கையில் அமைக்கப்பட்ட முதல் விகாரை.
அநுராதபுரம் பௌத்த புனிதச் சின்னங்களால் நிரம்பியிருக்கிற நகரம் . ருவான்வெலிசாய, விகாரைக்கு போகிற வழியில் போகிற நெடும்பாதைக்கு அருகில் சில கிலோமீட்டர் தூரத்தில் இசுறுமுனியா விகாரை அமைந்திருக்கிறது. மகிந்ததேர பிக்குவின் மாணவனான அரிட்டன் குமாரனில் இருந்து இசுறு குலத்தோர் ஐந்நூறு மாணவர்கள் வாழ்ந்த இடமே இசுறுமுனியா என்று மகாவம்சம் கூறுகிறது.
Add Comment