Home » எங்கே போனார் ஜக்தீப் தன்கர்?
இந்தியா

எங்கே போனார் ஜக்தீப் தன்கர்?

ஜக்தீப் தன்கர்

‘கடந்த ஜூலை 21ஆம் தேதியிலிருந்து முன்னாள் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கரை காணவில்லை. அவரைப் பற்றிய தகவல் தெரிந்தால் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது’ – இப்படி ஓர் அறிவிப்பை கேரளாவின் காங்கிரஸ் பிரிவு, எக்ஸ் தளத்தில் வெளியிட்டது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளன்று, உடல்நலக் காரணங்களைச் சுட்டிக்காட்டி பதவி விலகுவதாக அறிவித்தார் ஜகதீப்.அதுவே வெளியுலகில் அவர் நேரடியாகப் பங்கேற்ற கடைசி நிகழ்வு. இதனால், ஜக்தீப் தன்கர் என்ன ஆனார் ? அவருக்கு என்ன நேர்ந்தது ? அவரை ஏன் யாராலும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று எதிர்க்கட்சியினர் கேள்விகளை எழுப்பிய வண்ணம் உள்ளனர்.

‘ஜக்தீப்புக்கு உண்மையில் உடல்நலம் குன்றியுள்ளது என்றால் அவர் எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்? பாஜக அவருக்கு அறுவை சிகிச்சை செய்ததா? பாஜக அரசுதான் ஜக்தீப் தன்கரை காணாமல் போகச் செய்துள்ளது’ என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே குற்றஞ்சாட்டியுள்ளார். ‘பாஜக அவரை எங்கு ஒளித்து வைத்துள்ளது ? தன்கர் நலமாக உள்ளாரா என்று எங்களுக்குத் தெரிய வேண்டும்’ என்று ராகுல் காந்தி பாஜக அரசைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!