மைக்கேல் புது உற்சாகத்தில் இருந்தான். “வாலண்டைன்ஸ் டேக்கு டின்னர் டேபிள் புக் பண்ண வேண்டும்.” என்று சொல்லியபடியே மைக்கேல் தனது தொலைபேசியை எடுத்து அவன் விரும்பிய உணவகத்தை அழைத்தான். பின்னர் ஈஃப்ளோரிஸ்டின் இணையத் தளத்தில் ஒரு பூங்கொத்தையும் சாக்லேட் பெட்டியையும் ஆர்டர் பண்ணினான். அவன் தன் பாட்டுக்குச் செய்தால் பரவாயில்லை. பக்கத்திலிருக்கும் எனக்குச் சொல்லிக் கொண்டே செய்தான். நான் மைக்கேல் செய்யும் காரியங்களை வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தேன். இவ்வளவும் செய்தவன் நல்ல காலம் “நீஎன்ன செய்யப் போகிறாய்?” எனும் சங்கடமான கேள்வியை என்னிடம் கேட்கவில்லை. தப்பித்தேன்.
மைக்கேல் என்னுடன் பணி புரியும் சக ஊழியன். இரண்டு மாதங்களுக்கு முன்னர் எமது நிறுவனத்தின் மான்செஸ்டர் கிளையிலிருந்து லண்டன் கிளைக்கு மாற்றலாகி வந்தவன். அவன் ஒன்றும் இளையவனில்லை. வயது அறுபத்தைந்து ஆகிறது. கல்யாணமாகி நாற்பது வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. பேரப்பிள்ளைகள் இரண்டு உண்டு. ஆனாலும் காதலர் தினத்திற்குத் தன் மனைவியைச் சந்தோஷப்படுத்த ஆர்வத்துடன் செயல்பட்டுக் கொண்டிருந்தான்.
காதலர் தினக் கொண்டாட்டம் பற்றி அறிவேன். ஆனால் அதெல்லாம் கல்யாணமாகிய பிறகும் விசேஷமாகக் கொண்டாட வேண்டிய நாள் என்று நான் நினைத்ததில்லை. என் மனைவி ஷாலினியும் அது பற்றிப் பேசியதும் இல்லை.
இளம் வயதில் நல்லபிள்ளையாகப் படித்துக் கொண்டிருப்பவன் எனப் பெயர் எடுத்தேன். காதல் கத்தரிக்காய் என்று ஒன்றும் இருக்கவில்லை. இதற்கெல்லாம் முக்கிய காரணம் நான் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று என் கல்வியில் கவனம் செலுத்தியதல்ல. நான் இயற்கையாக ஒரு இன்றாவேர்ட் (Introvert). மற்றவர்களுடன் நானாகப் போய்ப் பேசும் பழக்கம் கிடையாது. இப்படியான ஒருவன் பெண்களோடு பழகிக் காதலிப்பது என்பது நடக்கிற காரியமா..? அதனால் இளமையில் காதல் செய்யவில்லை. ஆசை இருந்தது. ஆனால் திறமை இருக்கவில்லை. அவ்வளவுதான். அதனால் கல்லூரிக் காலத்திலும் காதலர் தினம் என் வாழ்வில் முக்கியத்துவம் பெறவில்லை.
கல்யாணம் பிறகு காதல் இப்படித் தான் இருக்கும். அன்பு இருக்கும். அதை வெளிக்காட்டாது தெரியாது. தோன்றாது
பாகம் இரண்டு இருக்கா? இப்படிக்கா பாதியில கதவை சாத்திட்டு போனா எப்புடி?