லண்டனில் ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பில் வேலை பார்க்கிறார் அந்த எழுத்தாளர். தன் வேலையை விட்டுவிட்டு மான்செஸ்டரிலிருந்து லண்டன் செல்ல முடிவு செய்கிறார். அதற்காக ரயில் ஏற வந்த இடம் கிங்ஸ் கிராஸ் ஸ்டேஷன். ரயில் நான்கு மணி நேரம் தாமதமாக வரப்போவதாக அறிவிப்பு வருகிறது. நாமென்றால் ஒன்பது கோள்களும் ஒன்பது கோல்களால் அடிப்பதைப் போல் உணர்ந்திருப்போம். ஆனால் அவர் அப்படி நினைக்கவில்லை. ஏனெனில் ஏற்கெனவே அடிவாங்கி மரத்த உடலும் மனமும் அது. அது சிந்தனை வயப்படுகிறது. ஓர் அழகான கதைக்கரு சட்டென்று தோன்றுகிறது. தன் சுற்றுப்புறத்தை மறக்கப் புனைவில் திளைக்கத் தொடங்குகிறார். மாயாஜால உலகின் நுழைவாயிலில் புகுந்து தன்னை மறக்கிறார்.
வழக்கமாகத் தோன்றும் கதைகளைப்போல் இதையும் அப்படியே காற்றில் விட்டுவிடவில்லை. ரயில் ஏறியதும் முதல் வேலையாகத் தன் கைக்குட்டையிலேயே கதைக் குறிப்பை எழுதி வைத்தார்.
அவர் ஜேகே ரவுலிங். அது ஹாரிபாட்டர்.
Good article!! JK Rowling did not stop with Harry Potter series. She continues to write for adult in the pseudonym – Robert Galbraith – Cormoran Series, a crime detective series and that is also a big hit. I wish the author could have elaborated on that as well in this article. https://en.wikipedia.org/wiki/Cormoran_Strike