Home » சுற்றிப் பார், சொக்கிப் போவாய்!
சுற்றுலா

சுற்றிப் பார், சொக்கிப் போவாய்!

பாபிலோனின் பழைய தொங்கும் தோட்டங்கள், சுல்தான் நெபுகாத் நெசர் வகையறாக்களைச் சிறிது நினைவுகூர்ந்து, நகர்த்தி வையுங்கள். உலகம் உருண்டை. காலம் உருண்டை. மீண்டும் உருவாகத் தொடங்கியிருக்கின்றன, பாலைவனத் தொங்கும் தோட்டங்கள்.

ஐக்கிய அமீரகத்தில் இருக்கும் ஏழு எமிரேட்டில் ஷார்ஜா ஒன்று. ஷார்ஜாவிலிருந்து பக்கத்து நாடான ஓமானுக்குப் போகிற வழியில் கல்பா என்றொரு இடம். பெரும்பாலும் பாலை நிலம். திட்டுத் திட்டாக ச் சிறு மலைகள். பெரிய உயரமில்லை. கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 282 மீட்டர். ஷார்ஜாவிலிருந்து பொடிநடையாக ஓமானுக்குப் புறப்பட்டால் இந்தப் பகுதியைக் கடக்கும்போது கண்ணெல்லாம் வெளிறிவிடும். வெயிலும் வறட்சியுமே காலகாலமாக இங்கே இருந்து வருவன.

ஆனால் இன்று அப்படியல்ல. ஷார்ஜாவின் சுல்தான் இந்தப் பிராந்தியத்தை ஏன் ஒரு பசுமைக் காடாக்கக் கூடாது என்று நினைத்தார். காடாக்க முடியாவிட்டாலும் கவனம் ஈர்க்கும் ஒரு தோட்டமாவது முடியாதா?

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்