Home » ஜம்மு காஷ்மீர் தேர்தல்: வெல்லவிருப்பது யார்?
இந்தியா

ஜம்மு காஷ்மீர் தேர்தல்: வெல்லவிருப்பது யார்?

ஜம்மு காஷ்மீர் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பதைவிடத் தேர்தல் வெற்றிகரமாக நடப்பதே முக்கியமான செய்தியாகும் அளவுக்கு நீண்ட இடைவெளி. இங்கு, பத்தாண்டுகளுக்குப் பிறகு மூன்று கட்டங்களாகச் சட்டமன்றத் தேர்தல் நடந்துள்ளது. சில பல அரசியல் திருப்பங்களுக்குப் பிறகு நடைபெறும் இந்தச் சட்டமன்றத் தேர்தல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது. மொத்தமுள்ள நூற்றுப் பதினான்கு தொகுதிகளில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகள் தவிர்த்து மீதமுள்ள தொண்ணூறு தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது.

2018ஆம் ஆண்டு பாராளுமன்றத்தால் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றம் கலைக்கப்பட்டு ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அப்போதிருந்து அந்த மாநிலம் பல மாற்றங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. அவற்றில் முக்கியமானது ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட ஆறு மாதங்களுக்குள் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய இந்திய அரசியலமைப்பு 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டது. இதன் மூலம் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட முதல் மாநிலமானது. அதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.

2022ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் எல்லை நிர்ணய ஆணையம் புதிய எல்லைகள், பெயர்கள் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளை அறிவித்தது. முந்தைய எல்லை நிர்ணயத்துடன் ஒப்பிடும் போது லடாக்கில் மூன்று தொகுதிகள் உட்பட ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தொண்ணூறு சட்டமன்றத் தொகுதிகள் தற்போது உள்ளன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!