மருந்து உருவாகும் கதை
பெரும்பான்மையான நேரங்களில் ஒரு மருந்து கண்டுபிடிப்பிற்கான அடித்தளம் அதாவது கீழ்நிலை ஆய்வுக் கட்டம் (Discovery phase) பல்கலைக்கழகங்களிலோ, ஆய்வு நிறுவனங்களிலோ அல்லது சிறிய உயிர்தொழில்நுட்ப நிறுவனங்களிலோ இடப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் பெரு மருந்து நிறுவனங்களில் இந்நிகழ்வுகள் அதிகம் நடப்பதில்லை. இந்தக் கீழ்நிலை ஆய்வுக் கட்டங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்று மனித உடலுக்குள் செலுத்தத் தகுதிபெறும் மூலக்கூறுகளை மட்டும் தேர்ந்தெடுத்துச் செய்யப்படும் மேல்நிலை ஆய்வுகளிலேயே பெருநிறுவனங்கள் ஈடுபடுகின்றன.
Add Comment