க்ரிஸ்பர் தெரபி
மருத்துவ உலகிற்கு உயிரியல் தொழில்நுட்பம் வழங்கியுள்ள மற்றொரு நன்கொடை க்ரிஸ்பர். இந்த க்ரிஸ்பர் பற்றி மேலோட்டமாக ஏற்கனவே சில அத்தியாயங்களில் நாம் பேசியுள்ளோம். இப்போது சற்று விரிவாகப் பார்த்துவிடலாம்.
நமது உடலில் நோயெதிர்ப்புச் சக்தி உள்ளது போல உலகில் உள்ள அனைத்து உயிரிகளுக்கும் ஏதாவது ஒரு வடிவில் நோயெதிர்ப்புச் சக்தி இருக்கும். அவ்வகையில் பாக்டீரியாக்களிடம் காணப்படும் ஒருவகையான நோயெதிர்ப்பு சக்தியே க்ரிஸ்பர் ஆகும். இதனை மூலக்கூறு கத்தரிக்கோல் (Molecular scissor) எனக்கூறலாம். பாக்டீரியா ஒரு நுண்ணுயிரி. இந்த நுண்ணுயிரிக்கும் வைரஸ், பூஞ்சை போன்ற மற்ற நுண்ணுயிரிகளால் ஆபத்து ஏற்படுவது உண்டு. அவ்வகையான நுண்ணுயிரிகளிடமிருந்து, குறிப்பாகச் சென்ற அத்தியாயத்தில் நாம் பார்த்த ஃபேஜ் வைரஸிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளப் பாக்டீரியாக்கள் இந்த க்ரிஸ்பர் கத்தரியினைப் பயன்படுத்துகின்றன.
Add Comment