Home » ராமனைக் கழட்டிவிடு, கிருஷ்ணனைத் தேரில் ஏற்று!
இந்தியா

ராமனைக் கழட்டிவிடு, கிருஷ்ணனைத் தேரில் ஏற்று!

1992-ஆம் ஆண்டு அயோத்தியில் பாபர் மசூதியை இடித்தது நம் நினைவில் இருக்கும். அதற்கு முன்பு அந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்பதற்கான ஆதாரங்கள், கதைகளாக உலவியது நினைவிருக்கிறதா? ராமர் விளையாடிய இடம், ராமர் கல்யாணம் செய்த இடம், அனுமனைச் சந்தித்த இடம் என்றெல்லாம் தினம் ஒரு செய்தியாக வந்தது. பத்திரிகையைத் திறந்தால் ராமரைத் தரிசிக்காமல் இருக்க முடியாது. அத்தனை செய்திகள். மெட்ராஸ்பேப்பர் இதழின் ஆசிரியர் பா.ராகவன் இச்செய்திகளைப் பகடி செய்து குரோம்பேட்டைக்கு ராமர் வந்ததற்கு ஆதாரம் உள்ளதாக ஒரு கதை எழுதியது, சர்ச்சைகளுக்கு வித்திட்டது. அநேகமாக அந்தக் கதையை யாரேனும் தேடிப் பிடித்து இப்போது வாட்ஸ்அப்பில் அனுப்பினால் அது கதையென்றுகூட உணாராமல் ஒரு கூட்டம் தீவிரமாக பார்வர்டு செய்யக்கூடும். இப்போது எதற்கு இந்தப் பழைய கதையெல்லாம் என்கிறீர்களா? பழசெல்லாம் கிடையாது. மதுரா இத்கா மசூதியில் கிருஷ்ணர் கோயில் இருந்ததா என்று ஆய்வு நடத்த அனுமதி கொடுத்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.

2020-ஆம் ஆண்டு மசூதியைத் தகர்த்து இந்துக்களிடம் ஒப்படைக்கக் கோரி தாக்கலான ரிட் மனு ஒன்றை 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தள்ளுபடி செய்தது நீதிமன்றம். தன் கொள்ளுப்பாட்டி தன் இளம் வயதில் இது கிருஷ்ணர் பிறந்த இடம் என்றும் இதை முஸ்லிம்கள் எடுத்துக்கொண்டார்கள் என்றும் சொல்லியதை ஆதாரமாகக் கொண்டு தாக்கல் செய்யப்பட்டது இந்த மனு. செத்துப்போன கொள்ளுப்பாட்டியின் கதை என்றாலும் உடனடியாக தள்ளுபடியாகாமல் வழக்கு நடந்தது. பொதுநல வழக்காகத் தாக்கல் செய்யப்பட்டதாலும் மசூதியை இடிக்கச் சட்டம் அனுமதிக்காது என்பதாலும் மனு தள்ளுபடியானது. இதைப்போல பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் இத்கா மசூதி மீது உள்ளன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!