Home » வெளியே போ! – உலகை உலுக்கும் வேலை நீக்க விவகாரம்
வாழ்க்கை

வெளியே போ! – உலகை உலுக்கும் வேலை நீக்க விவகாரம்

இன்றையத் தேதியில் உலகப் பணியாளர்களை அச்சுறுத்தும் ஒரே பயங்கரச் சொல், ‘லே ஆஃப்’.  நிறுவனம் சிறிதா பெரிதா என்பதல்ல. எங்கும் எப்போதும் நடக்கிறது ஆட்குறைப்பு அட்டகாசங்கள். காரணமெல்லாம் அவ்வளவு முக்கியமா? இனி உனக்கு இங்கே இடமில்லை. போகலாம். அவ்வளாவுதான். இந்தக் குண்டு தங்கள் மீது எப்போது விழுமோ என்று அச்சத்திலேயே இருக்கிறார்கள், அப்பாவி ஊழியர்கள்.

கொரோனா லாக்டவுன் காலத்தில் தொழில்நுட்பத் துறையும், இதர துறைகளும் அசுர வளர்ச்சி அடைந்தன. வீட்டிலிருந்தே விஞ்ஞானத்தைக் கையாண்டு வேலை செய்யத் தெரிந்தவர்களுக்குக் கண்மண் தெரியாமல் வேலை வாய்ப்புகள் அதிகமாயின. சம்பளங்கள் ராக்கெட்டுக்கு இணையாக உயர்ந்தன. புவியில் வாழ்பவர்கள் புவியீர்ப்பு விசையை எதிர்த்து எத்தனை உயரம்தான் சென்றிட இயலும்..? எந்த சக்தியால் உயர்ந்தோமோ அது தீர்ந்ததும், கீழே விழுந்துதானே தீர வேண்டும்..? அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

அந்த அசுர வளர்ச்சிக்குப் பின், முதல் பணி நீக்கம் 2022-இல் தொடங்கியது. லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை நீக்கம் (மாஸ் லேஆஃப்) என்று ட்விட்டர், மெட்டா, நெட்ப்ளிக்ஸ், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்கினர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!