இருவேறு பொருளாதாரப் படிநிலைகளில் வசிக்கும் பெண்கள் ஒருவரை ஒருவர் எவ்வாறு புரிந்துகொள்வார்கள்?
இரண்டு பெண்களைச் சந்தித்துப் பேசினோம். ஒருவர் தனியார் நிறுவனம் ஒன்றின் உயர் பொறுப்பில் இருப்பவர். இன்னொருவர் அவர் வீட்டில் சமையல் வேலை செய்பவர். அந்த வீட்டில் வேலை செய்யும் அம்மாவின் பெயர் பார்வதி. உயர் பொறுப்பொன்றில் வேலை செய்யும் பெண் அதிகாரியின் பெயர் மாதவி இராவணன். தொலைத் தொடர்புத்துறையில் தனியார் நிறுவனமொன்றின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார்.
பார்வதி அம்மாவிற்குச் சொந்த ஊர் செய்யாறு பக்கம் இருக்கும் ஒரு கிராமம். சென்னைக்கு வந்து நாற்பது வருடங்களாகின்றன. பத்து வருடங்களாக மாதவியின் வீட்டில் வேலை செய்து வருகிறார். வீட்டு வேலைக்கென வருபவர்கள் தொடர்ந்து வேலைக்கு வருவதில்லை எனத் தொடங்கி அவர்கள் செய்யும் வேலைகளில் குறைபட்டுக் கொள்பவர்கள் ஏராளம். இந்தக் குற்றச்சாட்டுகள் பல இடங்களிலும் பொதுவான பேசுபொருளாக இருக்கின்றது. ஆனால் பார்வதி அம்மாவின் மீது அப்படியான எந்தக் குற்றச்சாட்டுகளும் மாதவிக்கு இல்லை. அதனால்தான் பத்து வருடங்களாகத் தொடர்ந்து இங்கே வேலை செய்ய முடிகிறது பார்வதி அம்மாவால். நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்த பார்வதி அம்மாவுக்குக் கணவரில்லை. ஒரு மகன், இரண்டு மகள்கள் என மொத்தம் மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.
Add Comment